search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சாமை அரிசி புலாவ்
    X

    சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சாமை அரிசி புலாவ்

    சாமை அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு மிக சிறந்த உணவு. இது நீரழிவு நோயினை கட்டுப்படுத்தி வராமலும் தடுக்கிறது. சாமை அரிசியில் புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சாமை அரிசி - 2 கப்
    வெங்காயம் - 2
    பச்சைமிளகாய் - 3
    இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    பச்சை பட்டாணி - கால் கப்
    மிளகுதூள் - 2 தேக்கரண்டி
    கேரட், பீன்ஸ் நறுக்கியது - 1 கப்
    பிரிஞ்சி இலை, ஏலக்காய், பட்டை, கிராம்பு - தலா 2
    எண்ணெய் - தேவையான அளவு
    தேங்காய் பால் - 1 கப்
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி, புதினா - சிறிதளவு



    செய்முறை :

    * ப.மிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிககொள்ளவும்.

    * சாமை அரிசியை நன்றாக சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.

    * கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சைமிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் இஞ்சி, பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.

    * அடுத்து அதில் கேரட், பீன்ஸ், பச்சைபட்டாணி, மிளகுதூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    * காய்கறிகளை நின்றாக வதக்கிய பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து காய்களை வேகவிடவும்.

    * காய்கறிகள் வெந்த பின் அதனுடன் சாமை அரிசியை சேர்த்து, தேங்காய் பாலை அதில் ஊற்றி குக்கரை மூடி விசில் போடாமல் 15 நிமிடம் குறைந்த அனலில் வேகவிடவும்.

    * வெந்த பின் கொத்தமல்லி மற்றும் புதினா இலை சேர்த்து மெதுவாக கிளறிவிடவும்.

    * சுவையான சாமை அரிசி புலாவ் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×