search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வாய் துர்நாற்றத்தை போக்கும் புதினா டீ
    X

    வாய் துர்நாற்றத்தை போக்கும் புதினா டீ

    இந்த புதினா டீ வாய் துர்நாற்றத்தைப் போக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது என்பதால் உட்புறப் புண்களைக் குணமாக்கும். செரிமானத்தை மேம்படுத்தும்.
    தேவையான பொருட்கள் :

    புதினா இலை - 5,
    தேயிலை - ஒரு டீஸ்பூன்,
    தேன் அல்லது பனங்கற்கண்டு - ஒரு டீஸ்பூன்,
    பால் - கால் டம்ளர் (விருப்பப்பட்டால்).

    செய்முறை :


    * ஒரு டம்ளர் நீரில் புதினா இலை, தேயிலைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.

    * பாதியாகச் சுண்டியதும் வடிகட்டி, தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும். விருப்பப்பட்டால் பால் சேர்க்கலாம்.

    * பால் சேர்க்காமல் குடிப்பது தான் நல்லது.

    * தேன் அல்லது பனங்கற்கண்டுக்கு பதிலாக கருப்பட்டி சேர்த்தும் பருகலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×