search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு சத்தான மிளகு - வேர்க்கடலை சாதம்
    X

    குழந்தைகளுக்கு சத்தான மிளகு - வேர்க்கடலை சாதம்

    குழந்தைகளுக்கு சத்தான ஒரு லன்ஞ் செய்து கொடுக்க விரும்பினால் மிளகு - வேர்க்கடலை சாதம் செய்து கொடுக்கலாம். இப்போது இந்த சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சாதம் - 1 கப்,
    மிளகு - 2 டேபிள்ஸ்பூன்
    வறுத்த வேர்க்கடலை  - கால் கப்,
    கறிவேப்பிலை - சிறிது,
    உப்பு - தேவைக்கு
    கொத்தமல்லி தழை - சிறிதளவு

    தாளிக்க:

    கடலைப் பருப்பு,
    உளுந்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
    கடுகு - 1 டீஸ்பூன்,
    நெய் - 2 டேபிள்ஸ்பூன்.

    செய்முறை :

    * கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சாதத்தை உதிரியாக வடித்து 1/2 டீஸ்பூன் நெய் கலந்து வைக்கவும்.

    * வெறும் கடாயில் மிளகு, ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு இரண்டையும் போட்டு வறுத்து பொடித்து கொள்ளவும்.

    * கடாயில் நெய் விட்டு கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சாதத்தில் கொட்டி, பொடித்த மிளகு, உளுந்து பொடியை சேர்த்து வறுத்த வேர்க்கடலை, உப்பு சேர்த்து ஒரு புரட்டு புரட்டி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    * சூப்பரான மிளகு வேர்க்கடலை சாதம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×