search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கான கம்பு உருளைக்கிழங்கு ரொட்டி
    X

    குழந்தைகளுக்கான கம்பு உருளைக்கிழங்கு ரொட்டி

    குழந்தைகளுக்கு சத்தான உணவை அடிக்கடி கொடுப்பது அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. இன்று சத்து நிறைந்த கம்பு உருளைக்கிழங்கு ரொட்டி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கம்பு மாவு - 2 கப்
    உருளைக்கிழங்கு - 200 கிராம்
    வெங்காயம் - 1
    எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
    மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவைக்கு

    செய்முறை :

    * உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும்

    * கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * 1 கப் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து கொள்ளுங்கள்.

    * ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, வெங்காயம், எலுமிச்சைசாறு, மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய் தூள், உப்பு, கொத்தமல்லி போட்டு அதனுடன் கொதிக்க வைத்த தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும்.

    * பிசைந்த மாவில் சிறிது எடுத்து உருண்டைகளாக பிடியுங்கள்.

    * வாழை இலையில் சிறிது எண்ணெய் தடவி அதில் மாவு உருண்டையை வைத்து ரொட்டியாக தட்டி, சூடான தோசை கல்லில் சிறிது எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் வேகவைத்து எடுத்து சுவைக்கவும்.

    * இது குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவு. இந்த ரொட்டிக்கு தயிர் தொட்டு கொள்ள சூப்பராக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×