search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வாயுத்தொல்லையை நீங்கும் இஞ்சி பிரண்டை துவையல்
    X

    வாயுத்தொல்லையை நீங்கும் இஞ்சி பிரண்டை துவையல்

    வாயுத்தொல்லை, அஜீரண பிரச்சனையால் அவதிப்படுவர்கள் பிரண்டையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். இன்று இஞ்சி பிரண்டை துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இளம் தளிரான கொழுந்துப் பிரண்டைத் துண்டுகள் - ஒரு கைப்பிடி அளவு,
    இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
    புளி - ஒரு நெல்லிக்காய் அளவு,
    உளுத்தம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 2,
    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு,
    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    * பிரண்டையின் நாரை எடுத்து விட்டு பொடியாக நறுக்கவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை ஒன்றின் பின் ஒன்றாக போட்டு நன்றாக வதக்கவும்.

    * அடுத்து உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனியாக வறுக்கவும்.

    * முதலில் வறுத்த மிளகாய், உளுத்தம்பருப்பை உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

    * அனைத்தும் சிறிது அரைபட்டவுடன் புளி, வதக்கிய கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும்.

    * இஞ்சி பிரண்டை துவையல் ரெடி.

    குறிப்பு: பிரண்டை, இஞ்சி ஜீரண சக்தியைத் தரும். வாயுத்தொல்லை நீங்கும். இந்தத் துவையலை சூடான சாதத்தில் நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால்… அசத்தல் சுவையில் இருக்கும். சுட்ட அப்பளம், வடகம் இதற்கு நல்ல காம்பினேஷன்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×