search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இஞ்சி - பச்சை மிளகாய் தொக்கு
    X

    இஞ்சி - பச்சை மிளகாய் தொக்கு

    அஜீரண பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி இஞ்சியை உணவில் சேர்த்து கொள்ளலாம். இன்று அஜீரண பிரச்சனைக்கு உகந்த இஞ்சி - பச்சை மிளகாய் தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இளம் இஞ்சி - 25 கிராம்,
    பிஞ்சு பச்சை மிளகாய் - 10,
    புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு,
    அச்சு வெல்லம் - ஒன்று,
    எண்ணெய் - 4 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    * பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.

    * இஞ்சியை தோல் சீவி நறுக்கவும்.

    * வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், இஞ்சியை போட்டு நன்றாக வதக்கி ஆற வைக்கவும்.

    * மிக்சியில் வதக்கிய இஞ்சி, புளி, பொடித்த வெல்லம், உப்பு சேர்த்து, சிறிதளவு நீர்விட்டு அரைக்கவும்.

    * மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து மீதமுள்ள எண்ணெயை விட்டு, அரைத்து வைத்த விழுதைச் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும்.

    * சூப்பரான இஞ்சி - பச்சை மிளகாய் தொக்கு ரெடி.

    குறிப்பு: இதை சப்பாத்தி, தோசைக்கு தொட்டு சாப்பிடலாம். இஞ்சி ஜீரண சக்திக்கு மிகவும் நல்லது.
    Next Story
    ×