search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான முளைகட்டிய நவதானிய சூப்
    X

    சத்தான முளைகட்டிய நவதானிய சூப்

    முளைகட்டிய தானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. அனைத்து முளைகட்டிய நவதானியங்களை வைத்து சத்தான ஒரு சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முளைகட்டிய பயறுகள் - ஒரு கப்,
    வெங்காயம் - ஒன்று,
    பூண்டு - 2 பல்,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    தனியா - ஒரு டேபிள்ஸ்பூன்,
    மிளகு - காரத்துக்கேற்ப,
    கொத்தமல்லி தழை - தேவையான அளவு,
    எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,
    தேங்காய்ப் பால் - அரை கப்,
    புளிக்காத கெட்டி தயிர் - அரை கப்,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    * முளைகட்டிய பயறுகளை வேகவைத்துக் கொள்ளவும்.

    * மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, தனியா, சீரகம், மிளகு, கொத்தமல்லி தழை, வேக வைத்த பயறு கொஞ்சம் எடுத்து போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் அரைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் மீதமுள்ள வேக வைத்த பயறை சேர்த்து வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    * தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    * அடுப்பை சிறு தீயில் வைத்து, தேங்காய்ப் பால் சேர்த்து, கொதி வரும் போது அடுப்பை அணைத்துவிடவும்.

    * பரிமாறுவதற்கு முன் எலுமிச்சை சாறு, நன்கு அடித்த கெட்டித் தயிரை சேர்த்து கப்பில் ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

    * சத்தான முளைகட்டிய நவதானிய சூப் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×