search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான ஜவ்வரிசி வெங்காய ஊத்தப்பம்
    X

    சூப்பரான ஜவ்வரிசி வெங்காய ஊத்தப்பம்

    ஜவ்வரிசியை வைத்து செய்யும் ஊத்தப்பம் சூப்பரான இருக்கும். ஜவ்வரிசி ஊத்தப்பம் எப்படி செய்வது என்று விரிவாக கீழே பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இட்லி அரிசி - 4 கப்,
    உளுந்து - ஒரு கப்,
    ஜவ்வரிசி - கால் கிலோ,
    வெங்காயம் - 2,
    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 4,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    * வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    * அரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்து ஊற வைத்து, தோசைக்கு அரைப்பது போல் அரைத்து, புளிக்கவிட்டு உப்பு சேர்க்கவும்.

    * மறுநாள் ஜவ்வரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து மாவில் சேர்க்கவும்.

    * வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய் தாளித்து மாவில் சேர்க்கவும்.

    * தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி அதன் மேல் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை தூவி, சுற்றி எண்ணெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுத்து, காரச் சட்னியுடன் பரிமாறவும்.

    * சூப்பரான ஜவ்வரிசி வெங்காய ஊத்தப்பம் ரெடி.

    குறிப்பு:
    விருப்பப்பட்டால், கேரட் துருவல்  சேர்த்துக் கொள்ளலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×