search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடல் எடையை குறைக்கும் கொள்ளு - பார்லி கஞ்சி
    X

    உடல் எடையை குறைக்கும் கொள்ளு - பார்லி கஞ்சி

    கொள்ளு, பார்லி இந்த இரண்டையும் தினம் சாப்பிட்டு வந்தால் ஒரு சில மாதங்களிலேயே ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வறுத்துப் பொடித்த கொள்ளு -  அரை கப்
    வறுத்துப் பொடித்த பார்லி மாவு - கால் கப்
    சீரகத்தூள் - 1 சிட்டிகை,
    மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை,
    உப்பு - ஒரு சிட்டிகை.

    செய்முறை :

    * கொள்ளு மாவு, பார்லி மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.

    * அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    * நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி அடிபிடிக்காமல், கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

    * மாவு நன்றாக வெந்து திக்கான பதம் வந்தவுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கவும்.

    * சத்தான கொள்ளு - பார்லி கஞ்சி ரெடி.

    * தினமும் இந்த கஞ்சியை பருகுவதால் உடல் உறுதி பெறும். கெட்டநீர் முழுவதும் வெளியேறும். ஊளைச்சதை கரையும். உடல் சிக்கென்று கட்டுக்கோப்பாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×