search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சரும அரிப்பு நோயின் வெளிப்பாடு
    X

    சரும அரிப்பு நோயின் வெளிப்பாடு

    அரிப்பு என்பது பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு வெளிப்பாடு. காரணமின்றி விடாது அரிப்பு இருக்குமாயின் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
    அரிப்பு என்பது பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு வெளிப்பாடு. அரிக்கும் இடத்தை கை தானாகவே சொறிந்து விடும். இது சாதாரணமாகத் தெரிந்தாலும் சில நேரங்களில் அரிப்பு மிகப்பெரிய தொந்தரவாகலாம். இதற்கு உடலில் இருக்கும் நோய் காரணமாக இருக்கலாம்.

    கல்லீரல் நோய், அலர்ஜி என்ற காரணங்களும் இருக்கலாம். கோடைக்காலம், அதிக வியர்வை, வேர்க்குரு போன்றவை சாதாரணமாய் அரிப்பின் காரணங்கள். காரணமின்றி விடாது அரிப்பு இருக்குமாயின் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

    சில சரும பாதிப்புகள் அரிப்பினைத் தரலாம். அவை

    * சரும வீக்கம்
    * எக்ஸிமா எனும் சரும நோய்
    * சோரியாசிஸ் எனப்படும் சரும பாதிப்பு
    * சிவந்து, உப்பிய சருமம்
    * சரும அரிப்பினை உருவாக்கும் கிருமிகள்

    * சிக்கன் பாக்ஸ் எனும் அம்மை நோய்
    * பல பிரிவு அம்மை நோய் பாதிப்புகள்
    * பூஞ்சை பாதிப்புகள்
    * மூட்டை பூச்சி கடி மற்றும் சிறு பூச்சிகள்

    * பேன்
    * குடலில் சிறு பூச்சிகள்
    * ஸ்கேபிஸ் எனப்படும் ஒருவகை சரும பாதிப்பு இவை அனைத்தும் சரும அரிப்பிற்கான சரும பாதிப்பு காரணங்கள்.
    * நச்சுத் தன்மை வாய்ந்த செடிகள் சருமத்தில் படுவது.

    * கொசுக் கடி
    * கம்பளி
    * வாசனை திரவங்கள் (சென்ட்)
    * சில வகை சோப்புகள்
    * சாயம்

    * ரசாயனம்
    * சில உணவு அலர்ஜி

    ஆகியவையும் சரும அரிப்பினை ஏற்படுத்தலாம்
    சில தீவிர உடல் நல பாதிப்புகளும் சரும அரிப்பினை ஏற்படுத்தலாம்.

    * கல்லீரல் நோய்
    * ரத்த சோகை
    * தைராய்டு நோய்
    போன்ற சில நோய்களும் சரும அரிப்பினை ஏற்படுத்தும். மேலும்
    * நீரிழிவு நோய்

    * நரம்பு சம்பந்தமான சில பாதிப்புகள்
    ஆகியவையும் சரும அரிப்பினை ஏற்படுத்தும்.

    மருந்துகள்:

    * சில பூஞ்சை மருந்துகள்
    * சில ஸல்பர் மருந்துகள்
    * சில வலி நிவாரண மருந்துகள்
    * சில வலிப்பு நோய் மருந்துகள்
    சரும அரிப்பினை ஏற்படுத்தலாம்.

    கருவுற்ற காலத்தில் சில பெண்களுக்கு அரிப்பு ஏற்படலாம். மார்பகம், வயிறு, தொடை, கைமடிப்பு இவற்றில் ஏற்படலாம். ஏற்கனவே சரும பாதிப்பு உடையவர்கள் என்றால் கர்ப்ப காலத்தில் இது கூடும். எனவே மருத்துவ உதவி அவசியம்.



    மருத்துவ ஆலோசனை:

    * அரிப்பிற்கான காரணம் என்ன என்று தெரியாத நிலையில்
    * அரிப்பு மிக அதிகமாக இருந்தாலும்
    * அரிப்புடன் வேறு சில அறிகுறிகள் இருந்தாலும்
    உடனடி மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்

    * எத்தனை காலமாக இந்த அரிப்பு இருக்கின்றது?
    * அடிக்கடி வந்து வந்து போகின்றதா?
    * சருமத்திற்கு எரிச்சல் தரும் ரசாயனங்கள் ஏதாவது சருமத்தில் பட்டதா?
    * எந்த இடத்தில் அதிக அரிப்பு இருக்கின்றது?
    * மருந்து என்னென்ன எவ்வளவு காலம் எடுத்துக் கொள்கிறார்? போன்ற விவரங்களை மருத்துவரிடம் முறையாகக் கூற வேண்டும்.

    பரிசோதனைகள் :

    * ரத்த பரிசோதனை
    * தைராய்டு பரிசோதனை
    * சரும அலர்ஜி பரிசோதனை
    போன்ற பரிசோதனைகளை மருத்துவர் பரிந்துரை செய்வார்.
    சோதனை முடிவின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படும்.

    பொதுவில்

    * சருமத்தினை வறட்சி இல்லாமல் மாஸ்ட்சரைஸ் செய்து கொள்வது.
    * சருமத்தினை எரிச்சலூட்டும் ரசாயனங்களை தவிர்ப்பது.
    * அரிப்பு கட்டுப்படுத்தும் எளிய மருந்து எடுத்துக் கொள்வது.
    * சரும க்ரீம் மருந்து உபயோகிப்பது.

    போன்றவை தற்காலிக நிவாரணம் அளிக்கும்.

    சாதாரணமாக சற்று வறண்ட சருமம் கூட அரிப்பினை ஏற்படுத்தலாம். சில முறைகளை வீட்டிலேயே செய்யலாம்.

    * குளித்த பிறகு சிறிது தேங்காய் எண்ணெயுடன் சிறிது நீர் கலந்து உடலில் தடவலாம்.
    * பெட்ரோலியம் ஜெல்லி இதனை கை கால்களில் தடவலாம்.
    * பேக்கிங் சோடா சிறிதளவு எடுத்து மூன்று பங்கு தண்ணீர் கலந்து உடலில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம்.

    * துளசி இலை சாறு தடவுவது அரிப்பினை கட்டுப்படுத்தும் என இயற்கை வைத்தியம் கூறுகின்றது.
    * சோற்றுகற்றாழை தடவி குளிப்பது அரிப்பு உட்பட அநேக நன்மைகளை பயக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
    * ஆப்பிள் சிடார் வினிகரினை சிறிது நீர் கலந்து தடவி 15 நிமிடங்கள் சென்று கழுவி விடுவது மேற்கத்திய நாடுகளில் வீட்டு வைத்தியமாக கையாளப்படுகின்றது.
    Next Story
    ×