search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடல் நலக்கோளாறு இருக்கிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா?
    X

    உடல் நலக்கோளாறு இருக்கிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா?

    சின்னச்சின்ன உடல் நலக் கோளாறுகள் இருக்கிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இது குறித்த விரிவான தகவலை கீழே பார்க்கலாம்.
    சின்னச்சின்ன உடல் நலக் கோளாறுகள் இருக்கிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இது குறித்த விரிவான தகவலை கீழே பார்க்கலாம்.

    சளி, ஃபுளு, இருமல், மூக்கடைப்பு - கொடுக்கலாம்.

    ஆஸ்துமா - மூச்சுத்திணறல், நெஞ்சுவலி நின்ற பிறகு கொடுக்கலாம்.

    ஆஸ்துமாவிற்காக கார்டிஸோன் மருந்து சாப்பிடுகிறவர்கள் - வேண்டாம்.

    குழந்தை பிறந்த பிறகு 6 மாதம் ஆன தாய்மார்கள் - கொடுக்கலாம்.

    அபார்ஷன் ஆனவர்கள் - 6 மாதம் கழித்துக் கொடுக்கலாம்.

    குழந்தைக்குப் பால் கொடுப்பவர்கள் - பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு கொடுக்கலாம்.

    பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் - 6 மாதம் கழித்துக் கொடுக்கலாம்.

    சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் - 3 மாதத்திற்குப் பிறகு கொடுக்கலாம்

    பல் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் - 1 மாதம் கழித்துக் கொடுக்கலாம்

    பல்பிடுங்கிய பின் - 3 நாட்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

    இதய நோய்கள் - வேண்டாம்.

    இரத்த அழுத்த நோய் - கொடுக்கும்போது இரத்த அழுத்தம் சரியான அளவில் இருந்தால் கொடுக்கலாம்.

    வலிப்பு நோய் - மருந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தால் வேண்டாம். மருந்து நிறுத்தி 2 வருடங்கள் வலிப்பு இல்லை என்றால் கொடுக்கலாம்.

    தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் - 4 வாரங்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

    நாய்க்கடி சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள், மஞ்சள்காமாலை சிகிச்சை பெற்றவர்கள் - 12 மாதங்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

    மஞ்சள் காமாலை வந்தவர்கள் - வேண்டாம்.

    மலேரியா - 3 மாதங்களுக்குப் பிறகு.

    காசநோய் - 5 வருடங்கள் வேண்டாம்.

    மாத்திரைகளை சில காரணங்களுக்காகச் சாப்பிடுகிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா?

    சாலிசிலேட் மாத்திரையை கடைசி மூன்று நாட்கள் சாப்பிடுகிறவர்கள் இரத்த தானம் செய்யக்கூடாது. நீரிழிவு மாத்திரை சாப்பிடுகிறவர்கள் இரத்தக்குழாய் கோளாறு இல்லை என்றால் கொடுக்கலாம். இன்சுலின் போட்டுக் கொள்கிறவர்கள் கொடுக்க வேண்டாம். ஆன்டிபயாடிக் மாத்திரை சாப்பிட்டால் 5 நாட்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

    இதயக் கோளாறு மாத்திரைகள், வலிப்பு நோய் மாத்திரைகள், தைராய்ட் நோய் மாத்திரைகள், இரத்தம் உறையாமலிருக்க டிஜிடாலிஸ், டைலான்டின் போன்ற மாத்திரை சாப்பிடுகிறவர்கள் இரத்த தானம் செய்யக் கூடாது.

    இரத்ததானம் கொடுத்தபின் என்ன செய்யக் கூடாது?


    நல்ல திரவ உணவை அருந்துங்கள். ஹெவி உணவு வேண்டாம். ஒரு மணி நேரத்திற்கு புகை பிடிக்கக் கூடாது. 36 மணி நேரத்திற்கு மது அருந்தக் கூடாது. இரத்தம் எடுத்த இடத்தில் அழுத்தி வைக்கப்பட்ட பஞ்சை 5 மணிநேரம் எடுக்க வேண்டாம்.

    ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும், பெண்கள் நான்கு மாதத்திற்கு ஒரு முறையும் இரத்த தானம் செய்யலாம்.
    Next Story
    ×