search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வைரஸ் காய்ச்சலுக்கு சிறந்த நிலவேம்புக் குடிநீர்
    X

    வைரஸ் காய்ச்சலுக்கு சிறந்த நிலவேம்புக் குடிநீர்

    இப்போதும் மழைக்காலம் தொடங்கியுள்ளது. மழைக்காலத்தில் வரும் வைரஸ் காய்ச்சலுக்கு நிலவேம்புக் கசாயமே சிறந்தது என்று பரிந்துரை செய்யப்படுகிறது.
    இப்போதெல்லாம் மழைக்காலம் வந்துவிட்டாலே மக்களுக்கு உயிர் பயமும் வந்துவிடுகிறது. அந்த அளவிற்கு கடந்த சில வருடங்களாகவே டெங்கு காய்ச்சலும் அதன் தொடர்ச்சியாக மரணங்கள் பலவும் நிகழ்ந்துள்ளன. இந்த வைரஸ் காய்ச்சலுக்கு நிலவேம்புக் கசாயமே சிறந்தது என்று தமிழக அரசு பரிந்துரை செய்தது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வினியோகம் செய்யப்பட்டது. இப்போதும் மழைக்காலம் தொடங்கியுள்ளது. முன்னெச்சரிக்கையாக இருப்பது மிக மிக நல்லது.

    நிலவேம்புக் குடிநீர் என்பது நிலவேம்புப் பொடி, சுக்கு, மிளகு, பற்பாடகம், பேய்ப்புடல், சந்தனம், வெட்டிவேர், விலாமிச்சை வேர், கோரைக்கிழங்கு ஆகிய 9 மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகள் கலந்த கலவையாகும். ஒரு பாத்திரத்தில் 200 மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அதில் மேற்கண்ட பொடிக்கலவையை 5 கிராம் அதாவது 1 ஸ்பூன் என்ற அளவில் இட்டு அது 50 மில்லி அளவு ஆகும் வரை நன்கு காய்ச்சி வற்ற வைத்து பின் வடிகட்டி ஆற வைத்தால் நிலவேம்புக் குடிநீர் தயார்.

    டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் மூன்று நாட்களுக்கு 50 மி.லி. நிலவேம்புக் குடிநீரை நாளொன்றுக்கு காலை, மதியம், மாலை, இரவு என 4 வேளை பருக வேண்டும். அதன்பிறகு காய்ச்சலின் வீரியம் குறையும். அடுத்து வரும் 3 நாட்களில் அதை பாதியளவாக குறைத்து 2 வேளைகளுக்கு வழங்க வேண்டும்.

    இந்தக் குடிநீரை 10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும். 10 வயதுக்கு குறைவானவர்களுக்கு வழங்குவதற்கு மருத்துவரின் ஆலோசனை பெறவேண்டும். அவரது பரிந்துரைப்படி கொடுக்கலாம். நிலவேம்புப் பொடி அடங்கிய பாக்கெட்டுகள் மருந்துக்கடைகளில் கிடைக்கின்றன. இதனை வாங்கி கசாயமாக்கி குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தலாம்.
    Next Story
    ×