search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இரவு 7 மணிக்குப் பிறகு சாப்பிட்டால்...
    X

    இரவு 7 மணிக்குப் பிறகு சாப்பிட்டால்...

    இரவு 7 மணிக்கு பிறகு சாப்பிட்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை கீழே பார்க்கலாம்.
    இரவு ஏழு மணிக்குப் பிறகு சாப்பிடும் நபர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம் என்று புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது.

    துருக்கி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், 700 ஆண்கள் மற்றும் பெண்களிடம் ஓர் ஆய்வை மேற்கொண்டனர்.

    அந்த ஆய்வின் முடிவில், இரவு 7 மணிக்குப் பிறகு உணவு உண்ணும் நபர்களுக்கு எளிதில் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரத்துக்குள் தூங்கும் நபர்களுக்கு இதயம் தொடர்பான பிற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரியவந்தது.

    இரவு உணவருந்தியதற்குப் பின்னர் தூங்கும்போது நமது ரத்த அழுத்தமானது 10 சதவீதம் அளவுக்குக் குறைய வேண்டும்.

    ஆனால், 7 மணிக்குப் பிறகு சாப்பிட்டுவிட்டு இரண்டு மணி நேரம் இடைவெளி இல்லாமல் உடனடியாகப் படுக்கைக்குச் செல்லும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் குறையாதது தெரியவந்துள்ளது.

    மேலும், இரவில் தாமதமாக உணவு சாப்பிடும் நபர்களுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் எனவும் இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறதாம்.

    இரவில் தாமதமாகச் சாப்பிடுவது தொடர்ந்தால், அவர்கள் எளிதில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான சூழலுக்குத் தள்ளப்படுவார்கள் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
    Next Story
    ×