search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    முதுகு எலும்பை உறுதியடைய செய்யும் மண்டூகாசனம்
    X

    முதுகு எலும்பை உறுதியடைய செய்யும் மண்டூகாசனம்

    இந்த ஆசனம் செய்யும் போது உடல் தவளை போன்ற அமைப்பில் உள்ளதால் இதற்கு மண்டூகாசனம் என்ற பெயர் வந்தது.
    செய்முறை :

    முதலில் தரையில் குப்புற படுத்துக் கொண்டு மூச்சை நன்கு இழுத்து வெளிவிட வேண்டும். பிறகு இரண்டு கைகளையும் பின் பக்கமாக கொண்டு சென்று வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு இரண்டு கால்களையும் மடக்கி குதிகால்களை தொடைகளுக்கு அருகே கொண்டு வரவும்.

    பின்பு வலது உள்ளங்கையை வலது பாதத்தின் மேற்புறத்திலும், இடது உள்ளங்கையை இடது பாதத்தின் மேற்புறத்திலும், வைக்க வேண்டும். இந்த நிலையில் மூச்சை வெளிவிட்டபடி தலையையும், மார்பையும் மேல் நோக்கி உயர்த்தி குதிகால்களைத் தரையை நோக்கி நன்கு அழுத்தவும். முடிந்தால் குதிகால்களைத் தரையில் தொடும்படி செய்யவும்.

    இரண்டு முழங்கால்களுக்கு இடையே உள்ள இடைவெளியை முடிந்த அளவுக்கு குறைக்கவும்.

    அடுத்து தலையை நன்றாக உயர்த்தி மேலே பார்க்கவும். இந்த நிலையில் சுமார் 20 விநாடிகளுக்கு சாதாரண சுவாசத்தில் இருந்துவிட்டு பிறகு கால்களை மெதுவாக விடுவிக்கவும்.

    பயன்கள் :

    மார்பு நன்கு விரிவடைவதால் நுரையீரலுக்கு அதிக மூச்சு காற்று கிடைக்க ஏதுவாகிறது. இதன் மூலம் ஆஸ்துமா குணமடைகிறது. கழுத்து எலும்பு தோய்வு குணமடைய உதவுகிறது. செரிமான மண்டலத்தை சீர் செய்வதால் உணவு எளிதில் சீரணமாகிறது.

    இரு கால்களையும் வன்மைப்படுத்தவும், மலட்டுதன்மை குணமடையவும், சீறுநீரை வெளிப்படுத்தவும், கல்லடைப்பை குணப்படுத்தவும் உதவுகிறது. மேலும் முதுகு எலும்பை உறுதியடையச் செய்கிறது. குதிகால்களை மிருதுவாக்கி காலில் ஏற்படும் வலியை போக்குகிறது.
    Next Story
    ×