search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கான ஆடை கலாசாரம்
    X

    குழந்தைகளுக்கான ஆடை கலாசாரம்

    சின்னச்சின்ன விஷயத்தில் பெற்றோர்கள் காட்டும் அலட்சியம் குழந்தைகளின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிடும் என்கிறார்கள், குழந்தை மன நல மருத்துவர்கள்.
    குழந்தைகளிடம் நாம் என்ன விதைக்கிறோமோ அதுதான் பின்னாளில் அவர்களை உருவாக்குகிறது. சின்னச்சின்ன விஷயத்தில் பெற்றோர்கள் காட்டும் அலட்சியம் குழந்தைகளின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிடும் என்கிறார்கள், குழந்தை மன நல மருத்துவர்கள். இன்று பல பெற்றோர்கள் புலம்புவது குழந்தைகளின் ஆடையை பற்றித்தான். சின்ன வயதில் இடுப்பு தெரிய சட்டை போட்டது வாஸ்தவம் தான். ஆனால், 13 வயதுக்கு பின்னும் அதேபோல் உடை உடுத்தினால் என்ன அர்த்தம் என்கிறார்கள்.

    அரைகுறை ஆடைகளோடு டி.வி.யில் ஆடுவதைப் பார்க்கும்போது குழந்தைகள் மெல்ல மெல்ல அந்த கலாசாரத்தை தமக்கு நெருக்கமாக உணரத் தொடங்குகிறார்கள். ஆனால், இந்த பழக்கம் பருவ வயதிலும் நீடிப்பதுதான் பிரச்சினை. குழந்தையாக இருந்தபோது பழகிய பழக்கத்தால் பருவப் பெண்ணாக மாறிய பிறகும் உடலில் ஆடை விலகுவதை பற்றி அலட்டிக்கொள்வதில்லை. பெற்றோர்கள் கண்டிக்கிறார்கள்.

    சின்ன வயதில் இருந்து ஆசையாக விதவிதமாக, ரகம்ரகமாக ஆடைகள் வாங்கி அணிவிக்கும் பெற்றோர்கள், திடீரென்று அதற்கு தடை போடுவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இதனால் குழந்தைகள் பெற்றோர்கள் மீது வெறுப்பு கொள்கிறார்கள். தொடர்ந்து பெற்றோர்கள் என்ன சொன்னாலும் அதை செய்ய மறுக்கிறார்கள். பல பெற்றோர்கள் சிறுவயதில் கண்டிக்காமல் விட்டுவிட்டு திடீரென்று குழந்தைகளை கட்டுப்படுத்துவதால் பெற்றோர்கள் வில்லனாகிறார்கள். எந்த ஒரு பெண் தனக்கு வரும் காதல் கடிதத்தை பெற்றோரிடம் ஒப்படைக்கிறாளோ, அவள் எப்போதும் தடம் மாறிப் போகமாட்டாள் என்று மன நல மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

    சிறுவயதில் குழந்தைகள் உடல் தெரியும் ஆடைகளை கேட்டு அடம்பிடித்தால், “பாப்பாவுக்கு இந்த ஆடையைவிட பட்டுப்பாவாடை சூப்பரா இருக்கும். டி.வி.யில் வர்றவங்க விளம்பரம் முடிஞ்சதும் அந்த ஆடையை மாற்றி விடுவார்கள். அவர்களும் வீட்டில் இப்படி நல்ல உடைகளைத்தான் உடுத்துவார்கள்“ என்று குழந்தைகள் புரிந்துகொள்ளும் வகையில் சொல்லி சமாதானப்படுத்த வேண்டும்.

    குழந்தைகளிடம் எது நல்லது, எது கெட்டது என்பன போன்ற விஷயங்கள் பேசினாலும், வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் இருக்கும்போது அறிவுரை வழங்காமல், கலந்துரையாடல் போல் கொண்டு சென்று புரிய வைக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் முழுமையாக அறிய முடியும் என்கிறார்கள், மருத்துவர்கள். அதனால் குழந்தைகளுக்கு டிரஸ்கோடை கற்றுத்தருவோம்.
    Next Story
    ×