search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளின் நக‌ங்களை பராம‌ரி‌க்க டிப்ஸ்
    X

    குழந்தைகளின் நக‌ங்களை பராம‌ரி‌க்க டிப்ஸ்

    குழந்தைகளின் நகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமானது. குழந்தைகளின் நகங்களை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
    குழ‌ந்தைக‌ளி‌ன் நக‌ங்களை சு‌த்தமாக வையு‌ங்க‌ள். இது ‌மிகவு‌ம் மு‌க்‌கியமான ‌விஷயமாகு‌ம். வார‌த்‌தி‌ற்கு இரு முறை நக‌ங்களை வெ‌ட்டி ‌விடு‌ங்க‌ள். நக‌ம் கடி‌க்கு‌ம் பழ‌க்க‌த்தை ஆர‌ம்ப‌த்‌திலேயே ‌‌க‌ட்டு‌ப்படு‌த்து‌ங்க‌ள்.

    குழந்தைகள் வாயில் கையை வைக்கும் போது விரல் நகங்களில் இருக்கும் கிருமிகள் வாயினுள் சென்று நோயை ஏற்படுத்தும். எனவே குழந்தைகளில் நகங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியமானது.
     
    குழ‌ந்தைகளு‌க்கு நக‌ப் பூ‌ச்சுகளை பாத‌ங்க‌ளி‌ல் ம‌ட்டு‌ம் வையு‌ங்க‌ள். ‌கை ‌விர‌ல் நக‌‌ங்க‌ளி‌ல் வை‌க்க வே‌ண்டா‌ம். குழ‌ந்தைக‌ள் கைகளா‌ல் எதையாவது சா‌ப்‌பிடு‌ம்போது நக‌ப்பூ‌ச்சு‌ம் வ‌யி‌ற்று‌க்கு‌ள் போ‌ய்‌விடு‌ம்.
     
    குழ‌ந்தைக‌ளி‌ன் நக‌ங்களை நக‌ம் வெ‌ட்டு‌ம் கரு‌வி கொ‌ண்டு ம‌ட்டுமே வெ‌ட்ட வே‌ண்டு‌ம். ‌பிளேடா‌ல் வெ‌ட்டுவது ‌மிகவு‌ம் ஆப‌த்து.
     
    ‌சில‌ர் குழ‌ந்தைக‌ளி‌ன் நக‌ங்களை ப‌ற்களா‌ல் கடி‌த்து து‌ப்புவா‌‌ர்க‌ள். இது ‌மிகவு‌ம் தவறு. ‌நீ‌ங்க‌ள் செ‌ய்வதை‌ப் பா‌ர்‌த்து‌த் தா‌ன் குழ‌ந்தைகளு‌ம், நக‌ங்களை‌க் கடி‌க்க ஆர‌ம்‌பி‌க்‌கி‌‌ன்றன‌ர். அதனா‌ல் அவ்வாறு செய்யக்கூடாது.
    Next Story
    ×