search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளை தாக்கும் தோல் நோய்கள்
    X

    குழந்தைகளை தாக்கும் தோல் நோய்கள்

    சொறி சிரங்கு குழந்தைகளைத்தான் அதிகமாக தாக்குகிறது. அதிலும் குறிப்பாக சுகாதாரமற்ற சூழ்நிலையில் வாழும் குழந்தைகளுக்குத்தான் இது வரும்.
    தோலில் பலவகையான நோய்கள் ஏற்படுகின்றன. அவற்றில் சற்று முகம் சுளிக்க வைப்பது படை, சொறி சிரங்கு, வேனல் கட்டி, வியர்க்குரு போன்றவைகளாகும். இதில் சொறி சிரங்கு குழந்தைகளைத்தான் அதிகமாக தாக்குகிறது. அதிலும் குறிப்பாக சுகாதாரமற்ற சூழ்நிலையில் வாழும் குழந்தைகளுக்குத்தான் இது வரும்.

    சொறி சிரங்கு வருவதற்கு மூலகாரணமாக இருப்பது ஒரு வகை எட்டுக்கால் பூச்சி. இது நமது வீட்டில் காணப்படும் எட்டுக்கால் பூச்சி அல்ல. இந்த பூச்சி எட்டுக் கால்களை உடைய ஒரு சிறிய கண்ணுக்கு தெரியாத கிருமி. இது நமது தோலிலே பிறந்து வளர்ந்து, குடும்பம் நடத்தி குழந்தை பெற்று வளமாக வாழ்கிறது. தோலின் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குப் போக, இந்த பூச்சி நம் தோலுக்கு அடியிலேயே ஒரு சுரங்கப்பாதை அமைத்து அதில் வேகமாக பரவுகிறது. இந்த பூச்சிகளை அழித்து விட்டால் சொறி சிரங்கை அடியோடு அழித்து விடலாம். நவீன மருத்துவத்தில் ஒரே நாளில் இவற்றை ஒழித்து விடக்கூடிய மருந்துகள் எல்லாம் இப்போது வந்து விட்டன.

    வேனல் கட்டியும் குழந்தைகளை அதிகம் தாக்கக்கூடியது. வெயில் காலத்தில் வரும் இன்னொரு இம்சை ‘அக்கி‘. ‘ஹேர்ப்ஸ் ஜோஸ்டர்‘ என்ற வைரஸ் தான் அக்கி வருவதற்கு காரணம். இந்த வைரஸ், தோலை தாக்கினால் சின்னம்மை. நரம்பை தாக்கினால் அது அக்கி .

    அக்கியை பொறுத்தவரை இன்னொரு விசித்திரமும் உண்டு. இது உடலில் இடது பாகம் அல்லது வலது பாகத்தை மட்டுமே தாக்கும். அதே போல் அக்கி வந்தால் தனியாகவும் வராது. சின்னச்சின்ன நீர்க்கொப்பளங்களாக திராட்சை மாதிரி கொத்துக்கொத்தாகத்தான் வரும். ஆரம்பத்தில் வலி இருக்காது. போகப் போக வலி அதிகமாகி விடும். இதுவும் ஒரு தொற்று வியாதி தான்.

    குழந்தைகளுக்கு அக்கி வந்தால் தொடர்ந்து சின்னம்மை வரக்கூடிய அபாயம் உண்டு. அதனால் அக்கி வந்த குழந்தைகளை ஜாக்கிரதையாக பராமரிக்க வேண்டும். அதே போல் முகத்தில் அக்கி வந்தால், பார்வை, பேச்சுத் திறன் கூட பாதித்து விடும் அபாயம் உண்டு. தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டால் ஒரு நாளிலிருந்து ஒரு வாரத்துக்குள் இதை குணப்படுத்தி விட முடியும்.

    வெயில் கால வேதனைகளில் முக்கியமானவற்றில் வியர்க்குருவும் ஒன்று. வெயில் காலத்தில் வியர்வைத் துவாரங்கள் அதிகமாக செயல் படுவதால், ஒரு கட்டத்தில் வியர்வைத் துவாரம் சிவந்து மூடிக்கொள்ளும். அதுதான் வியர்க்குரு. வியர்க்குருவுக்கான பவுடரிலேயே இது பலருக்கும் குணமாகிவிடும். இதிலும் சரியாகவில்லை என்றால் அதற்கான மருந்துகளும் உள்ளன.
    Next Story
    ×