search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகள் புத்தகம் வாசிப்பது புத்திசாலித்தனத்தை ஞாபகத்திறனையும் வளர்க்கும்
    X

    குழந்தைகள் புத்தகம் வாசிப்பது புத்திசாலித்தனத்தை ஞாபகத்திறனையும் வளர்க்கும்

    சிறு வயதிலிருந்து புத்தம் படிக்கும் குழந்தைகள் புத்திக்கூர்மை மற்றும் ஞாபக சக்தி கொண்டவர்களாக திகழ்கிறார்கள்.
    கணினி மூலம், மொபைல்போன் மூலம் நாம் நிறைய விஷயங்கள் படிக்கலாம், கேட்கலாம் பார்க்கலாம். ஆனால் பிடித்த ஒரு புத்தகத்தை கையில் வைத்து படிப்பதென்பதே மிகவும் சுகமான ஒரு அனுபவம் என்பது படிப்பவர்களுக்கே தெரியும். அமைதியான ஓர் இடத்தில் அமர்ந்து, புத்தகத்தின் வாசத்தை அனுபவித்துக் கொண்டு படிப்பது மிகவும் ரசனைக்குரிய ஒன்று. ஆனால் ரசிப்பது என்பதை கடந்து புத்தகம் வாசிப்பது நம் உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்தை வளர்க்கிறது என்பதே சுவாரசியமான உண்மை.

    புத்திசாலித்தனத்தை ஞாபகத்திறனையும் வளர்க்கிறது :

    சிறு வயதிலிருந்து புத்தம் படிக்கும் குழந்தைகள் புத்திக்கூர்மை மற்றும் ஞாபக சக்தி கொண்டவர்களாக திகழ்கிறார்கள் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

    புத்தகம் வாசிப்பது, டி.வி. பார்ப்பதை விட 50 சதவிகிதம் அதிக வார்த்தைகளை தெரிந்துக்கொள்ள உதவுகிறதாம். இதனால் இக்குழந்தைகள் வார்த்தை விளையாட்டு, பொது அறிவு போட்டிகளில் இயல்பாகவே அதிகளவில் வெற்றி பெறுகிறார்களாம். தொடர்ந்து புத்தகம் படிப்பவர்களுக்கு வயதாவதினால் ஏற்படும் ஞாபக மறதி ஏற்படுவதில்லை. படிக்கும் போது நரம்பு செல்களிடையே தகவல்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பதாலும், புதுப்புது தகவல்களை படிப்பதால் புதிய நரம்பு செல்களின் தடங்கள் ஊக்கப்படுத்தப்படுவதாலும் டெமன்ஷியா, அல்சீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் தவிர்க்கப்படுகிறது அல்லது அதன் தாக்கம் குறைகிறது.

    உறவுகள் மேம்படுகிறது :

    புத்தகம் படிக்கும் பழக்கத்தினால் பிறருடைய இடத்தில் இருந்து பார்க்கவும், பிறருடன் தொடர்பு கொள்வதில் திறமையும் மேம்படுகிறது.

    தூக்கம் சீராகிறது :

    குழந்தைகளுக்கு படுக்கும் முன்பு புத்தகம் படித்து காண்பிப்பது, பெரியவர்களும் படுக்கைக்கு செல்லும் முன் படிப்பது உடல் மற்றும் மனத்தை தளர்வடைய வைக்கிறது. இதனால் உறக்கம் நன்றாக வருகிறது. படித்த விஷயங்களை ஆழ்மனது உள்வாங்கிக் கொண்டு அசைபோடவும் இது உதவுகிறது.

    குழந்தைகளின் பதட்டம் குறைகிறது :

    புத்தகம் படிக்கும் குழந்தைகள் பதட்டம் இல்லாமல் அமைதியாக அதிக நேரம் இருக்கிறார்கள். வீடியோ கேம் போன்றவைகள் அவர்களுக்கு உற்சாகம் கொடுப்பதாக இருந்தாலும் ஒருவித பதட்டத்தையும் கிளர்ச்சியையும் தொடர்ந்து அவர்களிடம் ஏற்படுத்தி விடுகிறது. ஆனால் புத்தகம் படிக்கும் போது மிகிழ்ச்சி கிடைப்பதுடன் நிதானம், பொறுமை போன்ற குணங்கள் மேலோங்குகிறது.
    Next Story
    ×