search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இரண்டு மாத குழந்தையின் கண் பார்வையை பரிசோதிப்பது எப்படி?
    X

    இரண்டு மாத குழந்தையின் கண் பார்வையை பரிசோதிப்பது எப்படி?

    இரண்டு மாத குழந்தையின் கண் பார்வையை எப்படி பரிசோதித்து பார்ப்பது என்பதை கீழே பார்க்கலாம்.
    கண் என்பது மனித உடல் உறுப்புகளில் முக்கியமான ஒன்று. குழந்தை பிறந்ததில் இருந்தே அவர்களுடைய வளர்ச்சி சீரான முறையில் இருக்கிறதா என அவ்வப்போது சோதித்து பார்க்க வேண்டும், ஏனெனில் அவர்களால் தங்களுக்கு இருக்கும் பிரச்சனையை கூறஇயலாது.

    எனவே தாய்மார்கள் தான் குழந்தையின் வளர்ச்சியில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தை பிறந்த ஒன்று அல்லது இரண்டு மாதத்திற்குப் பின் ஒரு தாயால் தன் குழந்தையின் பார்வையை பரிசோதிக்க முடியும்.

    அதில் முதல் ஸ்டெப், உங்கள் முகத்தை பார்த்து சிரிக்கும் அதே வேளையில் ஏதாவது வெளிச்சத்தைக் காட்டும்போது அதை குழந்தை பார்க்கின்றதா என பார்க்க வேண்டும்.

    ஒரு பொருளை சத்தமில்லாமல் குழந்தை முன் காட்டி, அதை வேறு திசையில் கொண்டும் செல்லும் போது குழந்தை பார்க்கிறதா என்பதை அவதானிக்க வேண்டும்.

    ஏனெனில் குழந்தை சத்தம் வரை திசையை நோக்கி பார்க்கலாம், எனவே சத்தம் இல்லாமல் பரிசோதித்து பார்ப்பது தான் சிறந்தது.

    Next Story
    ×