search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கல்வி தரும் சரஸ்வதியின் ரூபங்கள்
    X

    கல்வி தரும் சரஸ்வதியின் ரூபங்கள்

    என்றும் வற்றாத ஊற்றாகவும், வாழ்வில் பிரகாசம் தரும் ஞான ஒளியாகவும் கல்விச்செல்வத்தை வாரி வழங்குபவளாகிறாள் சரஸ்வதி.
    பிள்ளைகளின் கல்வி சிறக்க பெற்றோர்கள் வேண்டி நிற்கும் தெய்வம் சரஸ்வதி, முப்பெரும் தெய்வங்களில் படைப்புக்கான தெய்வமாக வணங்கப்படும் பிரம்மாவின் மனைவி ஆவார் . ‘சரஸ்’ என்றால் நீர் மற்றும் ஒளியைத் தடையின்றி அருள்பவள் என்று பொருள். அதாவது என்றும் வற்றாத ஊற்றாகவும், வாழ்வில் பிரகாசம் தரும் ஞான ஒளியாகவும் கல்விச்செல்வத்தை வாரி வழங்குபவளாகிறாள் சரஸ்வதி. அன்னப்பறவை ஞானத்தின் சின்னமாவதால் அதுவே சரஸ்வதியின் வாகனம் ஆகிறது.

    நாம் அறியும் சரஸ்வதியுடன் வேறு ரூபங்களிலும் சரஸ்வதி வணங்கப்படுகிறார்.

    அவை:-

    * சரஸ்வதி- நான்கு முகங்கள், ஆறு கரங்கள், ஜபமாலை, கமண்டலம், சுவடி, வீணை தாங்கி இருப்பவர்.

    * வாகீஸ்வரி- நான்கு கரங்கள், ஜடாமகுடம், ரத்னகுண்டலம், தண்டம், சுவடி, ஜபமாலை, கிண்டி தாங்கி, முக்கண் உடையவளாக காட்சி தருவார்.

    * பிரம்மபத்தினி- மான்தோல் ஆடை, நான்குமுகம், ஆறு கரங்கள், வாரதம், சூத்திரக்கயிறு, ஸ்வரூபம், சுவடி, குண்டிகை, அபயமுத்திரை கொண்டு காப்பவள் .

    * ராஜசியாமளா- எட்டுக் கரங்களுடன் காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்திலும், கச்சபேஸ்வரர் கோவிலிலும் வீற்று அருள்பாளிப்பவள்.

    இப்படி பல ரூபங்களில் சரஸ்வதி அம்மன் நமக்கு கல்வியை அருளும் தெய்வமாகிறார்.
    Next Story
    ×