search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சித்திரவாடி நவ நரசிம்மர்கள்
    X

    சித்திரவாடி நவ நரசிம்மர்கள்

    மதுராந்தகத்திற்கு அருகில் சித்திவாடி உள்ளது. இந்த கிராமத்தில் அகோபிலத்தில் உள்ளது போலவே அனைத்து நவ நரசிம்மர்களையும் எழுந்தருள செய்திருக்கிறார்கள்.
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் சித்திரவாடி நல நரசிம்மர்கள் ஆலயம் உள்ளது. சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் மதுராந்தகத்திற்கு அருகில் சித்திவாடி உள்ளது. இந்த கிராமத்தில் அகோபிலத்தில் உள்ளது போலவே அனைத்து நவ நரசிம்மர்களையும் எழுந்தருள செய்திருக்கிறார்கள்.

    சிறிய குன்றின் மீது மிக அழகாக ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. மலை அடிவாரத்தில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், ஆலயம், ஸ்ரீ பத்மாவதித் தாயாருக்கு தனிச் சன்னதி இருக்கிறது. ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயருக்கும் தனிச்சன்னதி உண்டு. ஸ்ரீசிம்மகிரி என்னும் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு தனி ஆலயமும் உள்ளது.



    கீழ்க்கண்டவாறு நவக்கிரகங்களுக்கு ஏற்றவாறு நவ நரசிம்மரை இங்கு தரிசிக்கலாம்.

    சூரியன் - பார்க்கவ நரசிம்மர்
    சந்திரன் - காரன்ய நரசிம்மர்
    செவ்வாய் - ஜ்வாலநரசிம்மர்
    புதன் - பாவன நரசிம்மர்
    குரு - அகோபில நரசிம்மர்
    சுக்கிரன் - ஸ்ரீமாலோல நரசிம்மர்
    சனி - யோக நரசிம்மர்
    ராகு - வராக நரசிம்மர்
    கேது - சாத்ரவட நரசிம்மர்.
    Next Story
    ×