search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்ட ராம சுவாமி கோவில் பிரமோற்சவம்
    X

    மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்ட ராம சுவாமி கோவில் பிரமோற்சவம்

    மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்ட ராம சுவாமி கோவில் பிரமோற்சவம் 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்ட ராம சுவாமி கோவிலில் பிரமோற்சவ விழா வருகிற 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரையிலான 11 நாட்கள் நடைபெற உள்ளது. பிரமோற்சவத்தின் முதல் நாளான 1-ந்தேதி இரவு அங்குரார்பண உற்சவத்துடன் ஆரம்பமாகிறது. 2 மற்றும் 3-ந்தேதிகளில் முறையே கேடய உற்சவமும், சூர்ய பிரபை உற்சவமும் நடக்கிறது.

    4-ந்தேதி காலை பல்லக்கு சேவையும், இரவு கருட வாகனமும் நடக்க இருக்கிறது. 5-ந்தேதி காலை சேஷ வாகனமும் (பரமபத சேவை), இரவு சிம்ம வாகனமும் நடக்கிறது. 6-ந்தேதி காலை நாச்சியார் திருக்கோலமும், இரவு அனுமந்த வாகனமும் நடக்க உள்ளது. 7-ந்தேதி காலை புன்னைமர வாகன சேவையும், மாலை திருக்கல்யாணமும் நடக்கிறது. 8-ந்தேதி காலை திருத்தேர் பவனி நடக்க இருக்கிறது. அன்றைய தினம் இரவு தோளுக்கினியான் நிகழ்வு நடக்க இருக்கிறது.

    9-ந்தேதி காலை வெண்ணைத்தாழி பல்லக்கும், இரவு குதிரை வாகன சேவையும் நடக்கிறது. 10-ந்தேதி இரவு புஷ்ப பல்லக்கு சேவை நடக்க இருக்கிறது. பிரமோற்சவ திருவிழாவின் இறுதிநாளான 11-ந்தேதி காலை துவாதச ஆராதனமும், இரவு பட்டாபிஷேக நிகழ்வும் நடக்க இருக்கிறது.

    மேற்கண்ட தகவல்களை கோதண்ட ராம சுவாமி கோவில் நிர்வாக அதிகாரி சு.நித்யகலா தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×