search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுடலைமாடசாமி கோவில் கும்பாபிஷேக விழா 27-ந்தேதி தொடங்குகிறது
    X

    சுடலைமாடசாமி கோவில் கும்பாபிஷேக விழா 27-ந்தேதி தொடங்குகிறது

    கன்னியாகுமரி மச்சிவிளையில் உள்ள சுடலைமாடசாமி கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    கன்னியாகுமரி மச்சிவிளையில் சுடலைமாடசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது. விழா 30-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி 27-ந் தேதி காலையில் கணபதி ஹோமம், தீபாராதனை, மதியம் 12.30 மணிக்கு சமபந்தி விருந்து, மாலை 4 மணிக்கு பக்தர்கள் புனிதநீர் எடுத்து யானை, குதிரை முன்செல்ல சிங்காரி மேளம் முழங்க ஊர்வலம் வருதல், அருட்பிரசாதம் வழங்குதல் போன்றவை நடக்கிறது.

    28-ந் தேதி காலையில் 2-ம் கால யாகசாலை பூஜை, மதியம் சமபந்திவிருந்து, மாலையில் 3-ம் கால யாக சாலை பூஜை போன்றவை நடக்கிறது. இதில் அருட்பணியாளர்கள் நசரேன், ஜாண்ரூபஸ், பங்குபேரவை துணைத்தலைவர்கள் லியோன், (கன்னியாகுமரி) சில்வஸ்டர் (சின்னமுட்டம்) வக்க்ீல் அரிஹரன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    29-ந் தேதி காலையில் 4-ம் கால யாகசாலை பூஜை, மாலையில் 5-ம் கால யாக சாலை பூஜை, இரவு அஷ்டபந்தனம் சமர்ப்பணம் போன்றவை நடைபெறுகிறது.

    30-ந் தேதி காலை 7.30 மணிக்கு விமானஅபிஷேகம், சுடலைமாடசுவாமி, முத்துபேச்சிஅம்மன் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம மற்றும் தீபாராதனை போன்றவை நடக்கிறது. தொடர்ந்து, அலங்கார தீபாராதனை, பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்குதலும், மதியம் 12.30 மணிக்கு சமபந்தி விருந்தும் நடைபெறும்.

    இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க மாநில துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தி உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி மச்சிவிளை சுடலைமாடசுவாமி கோவில் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×