search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கோடை திருநாள் உற்சவம் 30-ந்தேதி தொடங்குகிறது
    X

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கோடை திருநாள் உற்சவம் 30-ந்தேதி தொடங்குகிறது

    பூலோக வைகுண்டம், பெரிய கோவில் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கோடை திருநாள் உற்சவம் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது.
    பூலோக வைகுண்டம், பெரிய கோவில் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கோடை திருநாள் உற்சவம் வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. வெளிக்கோடை, உள் கோடை என இரு பிரிவாக உற்சவம் கொண்டாடப்படுகிறது.

    30-ந்தேதி முதல் 4-5-2017 வரை நடைபெற உள்ள வெளிக்கோடை உற்சவத்தின்போது ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் மாலை 6 மணிக்கு புறப்பாடாகி இரவு 7 மணிக்கு வெளிக்கோடை நாலுகால் மண்டபத்தில் எழுந்தருள்வார். புஷ்பம் சாத்துப்படி கண்டருளிய பின்னர் இரவு 8.30 மணிக்கு அங்கிருந்து புறப்பாடாகி இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

    இதையொட்டி தினமும் காலை 6 மணி முதல் 7.30 மணி வரை விசுவரூப சேவையும், காலை 8.45 மணி முதல் 12 மணி வரையும், பிற்பகல் 1.15 மணி முதல் மாலை 4 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8.45 மணி வரையும் மூலஸ்தான சேவை உண்டு. இரவு 8.45 மணிக்கு மேல் மூலவர் சேவைக்கு அனுமதி கிடையாது.

    மே 4-ந்தேதி ஸ்ரீராமநவமி தினத்தன்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி 7.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருள்கிறார். காலை 7.15 மணி முதல் மாலை 5.30 மணி வரை மூலஸ்தான சேவைக்கு அனுமதி உண்டு. விசுவரூப சேவை கிடையாது.



    மே 5-ந்தேதி உள் கோடை உற்சவம் தொடங்குகிறது. அன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி வெளிக்கோடை நாலுகால் மண்டபத்தில் எழுந்தருள்வார். இரவு 7.15 மணிக்கு அங்கிருந்து புறப்பாடாகி 7.45 மணிக்கு உள்கோடை மண்டபத்தை அடைவார்.

    இரவு 10.15 மணிக்கு வீணை வாத்ய இசையுடன் மூலஸ்தானம் சென்றடைவார். காலை 6 மணி முதல் 7.30 மணி வரை மூலஸ்தான சேவையும், காலை 8.45 மணி முதல் 12 மணி வரை, பகல் 1.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.45 மணி வரை மூலவர் சேவைக்கு அனுமதி உண்டு. 9-ந்தேதி வரை உள்கோடை உற்சவம் நடைபெறும்.

    10-ந்தேதி சித்ரா பவுர்ணமியன்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 10 மணிக்கு காவிரி கரையில் உள்ள அம்மா மண்டபத்தில் எழுந்தருள்கிறார். மாலை 6.15 மணிக்கு முதலையிடம் சிக்கிய யானையை காப்பாற்றும் கஜேந்திர மோட்சம் என்னும் நிகழ்ச்சி அம்மா மண்டபம் படித்துறையில் நடைபெறும். அம்மா மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×