search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சந்தையடி அய்யா வைகுண்டசாமி - தேவி முத்தாரம்மன் கோவில் திருவிழா
    X

    சந்தையடி அய்யா வைகுண்டசாமி - தேவி முத்தாரம்மன் கோவில் திருவிழா

    சந்தையடி அய்யா வைகுண்டசுவாமி நிழற்தாங்கலில் திருஏடு வாசிப்பு திருவிழா, தேவிஸ்ரீமுத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் சித்திரை திருவிழா தொடங்கியது.
    கொட்டாரம் அருகே உள்ள சந்தையடி அய்யா வைகுண்டசுவாமி நிழற்தாங்கலில் திருஏடு வாசிப்பு திருவிழா, தேவிஸ்ரீமுத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் சித்திரை திருவிழா நேற்று தொடங்கியது.

    நேற்று முதல் வருகிற 7-ந் தேதி வரை தினமும் மாலை 6 மணி முதல் அய்யாவின் திருநடையில் வைத்து திருஏடுவாசிப்பு நடக்கிறது.

    29-ந் தேதி இரவு 1-ம் கால யாக பூஜை தொடங்குகிறது. 30-ந் தேதி காலை 2-ம் கால யாக பூஜையும், காலை 9 மணி முதல் 10 மணிக்குள் விமான கும்பாபிஷேகம், முத்தாரம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. அன்று மதியம் 12 மணிக்கு சமபந்தி விருந்தும் நடக்கிறது.

    மே 5-ந் தேதி இரவு 9 மணிக்கு அய்யாவின் திருக்கல்யாண திருஏடு வாசித்து விளக்க உரை நடக்கிறது. 7-ந் தேதி மாலை 2 மணிக்கு அய்யாவின் பட்டாபிஷேக திருஏடு வாசித்து விளக்க உரையும், மாலை 5 மணிக்கு அய்யா கருட வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும், 9 மணிக்கு உகப்படிப்பும் நடக் கிறது.

    9-ந் தேதி மாரியம்மன், உஜ்ஜையினி மாகாளி அம்மன்,, பத்திரகாளி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு அலங்கார பூஜையும், மாலை 6 மணிக்கு அம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    10-ந் தேதி பகல் 12 மணிக்கு பிரம்மசக்தி, சப்பாணி மாடன், மாசானம் மற்றும் சுடலை மாட சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, பகல் ஒரு மணிக்கு சமபந்தி விருந்து, மாலை 5 மணிக்கு பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
    Next Story
    ×