search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா 29-ந்தேதி தொடங்குகிறது
    X

    குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா 29-ந்தேதி தொடங்குகிறது

    நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    நெல்லை சந்திப்பு குறுக்குத்துறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 11 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 10.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் கொடி மரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா நாட்களில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.



    வருகிற 5-ந் தேதி காலை உருகு சட்ட சேவையும், மாலையில் சுவாமி தங்க சப்பரத்தில் சிகப்பு சாத்தி நெல்லை மாநகருக்கு எழுந்தருளுகிறார். 6-ந் தேதி காலை வெள்ளை சாத்தியும், இரவில் பச்சை சாத்தியும் கோவிலை வந்து அடைகிறார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 8-ந் தேதி காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது. 9-ந் தேதி காலை 10.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் தீர்த்தவாரி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் சங்கர நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
    Next Story
    ×