search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தமிழ்ப்புத்தாண்டையொட்டி சுவாமிமலை முருகன் கோவிலில் படிபூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    தமிழ்ப்புத்தாண்டையொட்டி சுவாமிமலை முருகன் கோவிலில் படிபூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.

    சுவாமிமலை முருகன் கோவிலில் படி பூஜை

    சுவாமிமலை முருகன் கோவிலில் நேற்று கோவிலில் அமைந்துள்ள 60 படிகளுக்கும் விளக்குகள் ஏற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    முருகனின் ஆறுபடை வீடுகளுள் 4-வது படை வீடாக தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாதர் கோவில் திகழ்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய இந்த கோவில் குரு உபதேச தலம் எனச்சிறப்பு பெற்றது.

    இந்த கோவிலில் தமிழ் வருட தேவதைகள் தங்கள் பெயர்களுடன் 60 படிகளாக அமர்ந்து சுவாமிநாதருக்கு சேவை செய்து வருவது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும். பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் ஆங்கில புத்தாண்டு ஆகிய நாட்களில் தமிழ் வருட தேவதைகள் பெயருடன் அமைந்துள்ள 60 படிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி தமிழ்ப் புத்தாண்டையொட்டி நேற்று படிபூஜை நடைபெற்றது.

    இதை முன்னிட்டு கோவிலில் அமைந்துள்ள 60 படிகளுக்கும் விளக்குகள் ஏற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×