search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் தந்திரி கண்டரரு ராஜீவரு பக்தர்களுக்கு நாணயங்களை கை நீட்டமாக வழங்கிய போது எடுத்த படம்.
    X
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் தந்திரி கண்டரரு ராஜீவரு பக்தர்களுக்கு நாணயங்களை கை நீட்டமாக வழங்கிய போது எடுத்த படம்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

    விசு பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    கேரளாவில் நேற்று புத்தாண்டான விசு பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அறுவடை விழாவாக கொண்டாடப்படும் இந்த விழாவை யொட்டி, ஐஸ்வரியம் பெருகவும், செல்வம் கொழிக்கவும், கிடைத்த செல்வம் நிலைக்கவும் வேண்டி கோவில்கள், வீடுகளில் கனிகளை கண்டு மக்கள் மகிழ்ந்தனர். வீடுகளில் உள்ள பெரியவர்கள், நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை கை நீட்டமாக வழங்கினர்.

    விசு பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் அனைத்து கோவில்களிலும் நேற்று காலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு விசு கனி தரிசனத்திற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து குடும்பம்- குடும்பமாக பக்தர்கள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து, விசு கனி கண்டு வழிபாடு செய்தனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. சாமி ஐயப்பன் கனி காணுதலுக்கு பிறகு, பக்தர்கள் கனி தரிசனம் நடத்தினர். விசு கனி தரிசனம் காண, சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலை 3 மணி முதல் 7 மணி வரை கனி தரிசனம் நடந்தது.



    கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரரு, மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோர் பக்தர்களுக்கு கை நீட்டமாக நாணயங்களை வழங்கினர்.

    குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் விசு பண்டிகை வழிபாடுகள் சிறப்பாக நடை பெற்றது. இதையொட்டி கோவில் நடை அதிகாலை 2.30 மணிக்கு திறக்கப்பட்டது. கோவில் மேல்சாந்தி பக்தர்களுக்கு விசு கை நீட்டம் வழங்கினார்.

    திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில், கனி காண சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. கனி காணவும், வழிபாடுகளில் கலந்து கொள்ளவும் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலில் கூடியிருந்தனர்.

    திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில், கரிக்ககம் சாமுண்டி தேவி கோவில், சிறையின்கீழ் சார்க்கரை தேவி கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் விசு பண் டிகை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
    Next Story
    ×