search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தொட்டப்பநாயக்கனூரில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    தொட்டப்பநாயக்கனூரில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    தொட்டப்பநாயக்கனூர் பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

    மதுரை மாவட்டம் தொட்டப்பநாயக்கனூர் பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
    உசிலம்பட்டி வட்டம் தொட்டப்பநாயக்கனூரில் சத்திரியகுல நாடார்கள் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோவில் மற்றும் நூதன பரிவார மூர்த்திகள் ஆலய திருகோபுரம் கட்டி முடிக்கப்பட்டது.

    இதற்கான கும்பாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது. நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ், எஸ்.வி.என்.கல்லூரி துணை தலைவர் பெரீஸ் மகேந்திரவேல், உசிலம்பட்டியில் உள்ள சிவகாசி சத்திரியகுல நாடார் உறவின் முறை தலைவர் மாணிக்கநாதன், தொழிலதிபர்கள் ஆண்டிப்பட்டி வஜ்ரவேல், உசிலம்பட்டி சுப்பிரமணியன், உசிலம்பட்டி சத்திரியகுல இந்து நட்டாச்சி நாடார்கள் உறவின் முறை தலைவர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதனை தொடர்ந்து, தெய்வங்களுக்கு புனராவர்த்தன, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா நடந்தது. விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், தொட்டப்பநாயக்கனூர் சத்திரியகுல நாடார்கள் உறவின் முறை தலைவர் ராஜேந்திரவேல், செயலாளர் கருப்பசாமி, பொருளாளர் கருணைசாமி, நிர்வாகிகள் ராஜவேல் முருகன், தெய்வம் என்ற தாளமுத்து, மாணிக்க ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×