search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கறம்பக்குடியில் முத்து கருப்பையா சுவாமி கோவில் காளைக்கு சிலை
    X

    கறம்பக்குடியில் முத்து கருப்பையா சுவாமி கோவில் காளைக்கு சிலை

    கால்நடைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி கறம்பக்குடி பகுதி பக்தர் ஒருவர் முத்து கருப்பையா சுவாமி கோவில் முன்பு காளைக்கு அழகான சிலை ஒன்று அமைத்தார்.
    கறம்பக்குடியில் பிரசித்தி பெற்ற முத்து கருப்பையா சுவாமி கோவில் உள்ளது. இந்தகோவிலில் உள்ள கருப்பர் இப்பகுதி மக்களின் எல்லைக்காக்கும் தெய்வமாக விளங்கி வருகிறார். இக்கோவிலுக்கு காளைகள் மற்றும் கன்று குட்டிகளை பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்துவது வழக்கம்.

    இக்கன்று குட்டிகள் வளர்ந்து கருப்பர் சாமி காளையாக இப்பகுதி மக்களால் செல்லமாக வளர்க்கப்படுகிறது. இந்த காளைகளை அவ்வப்போது ஜல்லிக்கட்டு போட்டிக்கும் கொண்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் கருப்பர் சாமி காளைகளில் ஒன்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தது.

    அந்த காளையின் நினைவாகவும், வீட்டில் கால்நடை செல்வம் பெருக வேண்டியும் கால்நடைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டியும் கறம்பக்குடி பகுதி பக்தர் ஒருவர் முத்து கருப்பையா சுவாமி கோவில் முன்பு காளைக்கு அழகான சிலை ஒன்று அமைத்தார். அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

    இதில் கோவில் நிர்வாகிகள், கறம்பக்குடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் செய்து கருப்பர் சாமி காளை சிலையை வழிபட்டனர்.
    Next Story
    ×