search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வடக்குவாச்செல்லியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா
    X

    வடக்குவாச்செல்லியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா

    மேலூர் அருகே உள்ள அ.வள்ளாலபட்டி பேரூராட்சியில் உள்ளது அரியப்பன்பட்டி. இங்குள்ள வடக்குவாச்செல்லியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான விழா நேற்று தொடங்கியது.
    மேலூர் அருகே உள்ள அ.வள்ளாலபட்டி பேரூராட்சியில் உள்ளது அரியப்பன்பட்டி. இங்குள்ள வடக்குவாச்செல்லியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா நேற்று தொடங்கியது.

    அதில் 400-க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் பானையுடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். மேலும் பால்குடம் ஏந்திய பக்தர்கள் ஏராளமானோர் வந்தனர். அவர்கள் அனைவரும் கோவில் முன்பு, ஒரே நேரத்தில் பொங்கல் வைத்து வடக்குவாச்செல்லியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து, பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

    இந்த திருவிழாவையொட்டி உள்ளூர், வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இந்த கோவிலின் திருவிழா குறித்து பூசாரி முத்துப்பாண்டி குமரன் கூறியதாவது:-

    வடதிசையை ஆண்ட பாண்டிய வம்சத்தினருக்கு குல தெய்வமான வடக்குவாச்செல்லியம்மன் கோவில் திருவிழா ஆண்டு தோறும் பங்குனி மாதம் 2-வது வெள்ளிக்கிழமை நடைபெறும், இதில் ஏராளமான பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேறுவதாக நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர். மேலும் கோவில் கர்ப்பக்கிரகத்தில் ஒரு கருநாகம் பல வருடமாக உள்ளது. அது வடக்குவாச்செல்லியம்மனுக்கு காவலாக உள்ளதாக நம்பப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×