search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவர், ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்த காட்சி.
    X
    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவர், ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்த காட்சி.

    தேய்பிறை அஷ்டமி: தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவர் பூஜை

    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பரிவார மூர்த்திகளில் ஒருவராக சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளியுள்ளார். இவருக்கு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியின் போது 5 கால சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இம்மாத சிறப்பு பூஜை நேற்று நடைபெற்றது.

    தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சந்தனம், மஞ்சள், தேன், இளநீர், திருமஞ்சனப்பொடி, அரிசிமாவு, பால் உள்ளிட்ட அபிஷேக பொருட்களுடன் கலந்து கொண்டனர். பின்னர் பைரவருக்கு இளநீர், தேன், பால் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. இதைத்தொடர்ந்து தேனி ஹரே ராமா ஹரே கிருஷ்ணா குழுவை சேர்ந்த குருக்கள் ராம நாம கீர்த்தனைகளை பாட பக்தர்களும் தொடர்ந்து பாடினர்.

    இதன் பின்னர் பக்தர்களால் காணிக்கையாக வழங் கப்பட்ட அரளி உள்ளிட்ட மலர்களை கொண்டு ராஜ அலங்காரத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று உரக்க கூறியபடி இருகரங்களையும் உயர்த்தி வணங்கினர்.

    இந்த சிறப்பு பூஜையில் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், அரசு உயர் அலுவலர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×