search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் தேர் திருவிழா தொடங்கியது
    X

    தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் தேர் திருவிழா தொடங்கியது

    மதுரை காளியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில் நேற்று அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் மதுரை காளியம்மன் வீதி உலா வந்தார்.
    திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் மதுரை காளியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனித்தேர்த்திருவிழா ஒரு வார காலம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தினமும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பூச்சொரிதல் விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் மதுரை காளியம்மன் வீதி உலா வந்தார். நாளை(செவ்வாய்க்கிழமை) இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியை முன்னிட்டு வரதராஜபுரத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இளநீர் காவடி எடுத்து வருகின்றனர்.



    தொடர்ந்து கோவில்(உட்பிரகாரம் அம்மன் சன்னதி மட்டும்) ஒருவாரம் அடைக்கப்பட்டிருக்கும். அவ்வாறு அடைக்கப்படும் அம்மன் கருவறையில் 2 பெரிய பானைகளில் நெய் ஊற்றி 8 முழ வேட்டியால் ஆன 2 பெரிய திரிகள் தயாரிக்கப்பட்டு விளக்கு ஏற்றப்படும். இதை தொடர்ந்து அடுத்த நாள் இரவு அடைத்த கோவிலுக்கு ஆயிரம் பானையில் பொங்கல் வைத்து வழிபாடு நடக்கிறது.

    28-ந்தேதி நள்ளிரவு கோவில் வளாகத்தில் சின்னத்தேர், பெரியத்தேர் வண்ண, வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு திருத்தேர் தலையலங்காரம் நடைபெறுகிறது. இதில் பெரிய தேரில் ஓலைப்பிடாரி அம்மனும், சின்னத்தேரில் மதுரைகாளியம்மனும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×