search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா பூச்சாட்டுடன் இன்று மாலை தொடங்குகிறது
    X

    அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா பூச்சாட்டுடன் இன்று மாலை தொடங்குகிறது

    அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ளது பத்ரகாளியம்மன் கோவிலில் இந்தாண்டுக்கான குண்டம் விழா இன்று (வியாழக்கிழமை) மாலை பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
    அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ளது பத்ரகாளியம்மன் கோவில். பிரசித்தி பெற்ற இந்த கோவில் குண்டம் விழா, ஆண்டு தோறும் பங்குனி மாதம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்தாண்டுக்கான குண்டம் விழா இன்று (வியாழக்கிழமை) மாலை பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து வரும் 22-ந் தேதி மகிஷாசூரமர்தனம் எருமைகிடா வெட்டும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    29-ந் தேதி காலை கொடியேற்றமும் நடக்கிறது. தொடர்ந்து அன்று முதல் சாமி பல்வேறு வாகனங்கள் மூலம் திருவீதி உலா வருகிறது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந் தேதி காலை குண்டம் விழா நடக்கிறது.

    விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி தீ மிதிக்கிறார்கள். ஈரோடு மாவட்டம் முழுவதுமிருந் தும் பக்தர்கள் திரளாக குண்டம் விழாவில் பங்கேற்கிறார்கள்.

    குண்டம் விழாவை தொடர்ந்து 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை தேர் திருவீதி உலா வருகிறது. 11-ந் தேதி பாரிவேட்டை நடக்கிறது. 12-ந் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.
    Next Story
    ×