search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கால் மாறி ஆடிய நடராஜர்
    X

    கால் மாறி ஆடிய நடராஜர்

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், சன்னிதியில் நுழைந்தவுடன் நடராஜர் இடதுகால் ஊன்று வலது கால் தூக்கி நடனமாடியபடி காட்சி தருகிறார்.
    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், நடராஜர் சபைகளில், வெள்ளி சபையாக வருணிக்கப்படுகிறது. சுவாமி சன்னிதியில் நுழைந்தவுடன் நடராஜர் இடதுகால் ஊன்று வலது கால் தூக்கி நடனமாடியபடி காட்சி தருகிறார். எல்லா ஆலயங்களிலும் நடராஜர் வலது காலை ஊன்றி இடதுகாலை தூக்கியபடியே காட்சியளிப்பார். இங்கு அவர் வலது காலை தூக்கி ஆடும் நிலையில் காணப்படுகிறார்.



    ஒரு முறை மதுரையை ஆண்ட பாண்டியன், நடனக் கலையை படித்து முடித்துவிட்டு, இத்தல நடராஜரை வழிபட்டு நன்றி சொல்வதற்காக வந்தான். அப்போது, ‘இறைவா! நடனம் கற்பது என்பதே மிகக் கடினமான ஒன்றாக இருக்கும் போது, நீயோ காலம் காலமாக வலதுகால் ஊன்றி, இடது கால் தூக்கி ஆடிக்கொண்டிருக்கிறாய். எனக்காக கால் மாறி ஆடி அருளக்கூடாதா?’ என்று வேண்டினான். அதன்படியே பாண்டியனுக்காக கால்மாறி ஆடினார் நடராஜர்.
    Next Story
    ×