search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வாழைக்கொல்லை கிராமத்தில் மயானக்கொள்ளை விழா நடந்தபோது எடுத்த படம்.
    X
    வாழைக்கொல்லை கிராமத்தில் மயானக்கொள்ளை விழா நடந்தபோது எடுத்த படம்.

    வாழைக்கொல்லை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா

    வாழைக்கொல்லை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    சேத்தியாத்தோப்பு அருகே வாழைக்கொல்லை கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மயானக்கொள்ளை விழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டுக்கான மயானக்கொள்ளை விழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    இதையடுத்து தினமும் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் சாமி வீதிஉலா நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயானக்கொள்ளை விழா நேற்று முன்தினம் நடை பெற்றது. இதையொட்டி அன்று காலை அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன், பாவாடைராயன், வீரபுத்திரன், விநாயகர், பேச்சியம்மன் ஆகிய சாமிகள் தனித்தனி வாகனத்தில் எழுந்தருளி காட்டுமன்னார்கோவில்-சேத்தியாத்தோப்பு சாலை அருகே உள்ள மயானத்தை சென்றடைந்தனர். இதையடுத்து அங்கு மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் வாழைக்கொல்லை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காப்பு களைதல், விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×