search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 24-ந்தேதி மகா சிவராத்திரி விழா
    X

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 24-ந்தேதி மகா சிவராத்திரி விழா

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும் 24-ந்தேதி மகா சிவராத்திரி விழா நடக்கிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுவார்கள்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும் 24-ந்தேதி மகா சிவராத்திரி விழா நடக்கிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுவார்கள்.

    வரும் 24-ம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு லட்சார்ச்சனை நடைபெறும் பக்தர்கள் கிரிவலம் வந்து வில்வ கூடைகள் வழங்குவார்கள். கோவிலில் பன்னிரு திரு முறை இசைக்கச்சேரி இரவு முழுவதும் நடக்கும்.

    அதே போல் கோயில் ராஜகோபுரம் முன்பு 108 தவில் நாதஸ்வர வித்வான்களின் தொடர் இன்னிசை கச்சேரி நடக்கும். நள்ளிரவு லிங்கோத்பவருக்கு அபிஷேகத்தில் தாழம்பூ வைத்து வழிபாடு நடக்கும். இது சிவராத்திரியில் மட்டும் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



    கோவில் முழுவதும் லட்ச தீபங்கள் ஏற்றப்படும். உப்பு கோலங்கள் வரையப்படும். கோவில் வளாகத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கும். உலகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டில் கலந்து கொண்டு வழிபடுவார்கள் என்பது குறிப்பிடதக்கதாகும்.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். அதே போல் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்கள், அடி அண்ணாமலை ஆதிஅருணாசலேஸ்வரர் கோயில் உள்பட அனைத்து சிவன் கோவில்களில் இந்த நாளில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
    Next Story
    ×