search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விரகாலூர் கமலாம்பிகை-வன்மீகநாத சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா 8-ந்தேதி நடக்கிறது
    X

    விரகாலூர் கமலாம்பிகை-வன்மீகநாத சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா 8-ந்தேதி நடக்கிறது

    திருச்சி லால்குடி உள்ள திருத்தொண்டஸ்வரமான வன்மீகநாதர் கோவிலில் வருகிற (மார்ச்) 8-ந்தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
    திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் கொள்ளிடம் வடகரையில் விரகாலூர் கிராமம் அமைந்துள்ளது. கி.பி. 11-ம் நூற்றாண்டில் விற்காவூர் என்று அழைக்கப்பட்ட இங்கு திருத்தொண்டஸ்வரமான வன்மீகநாதர் கோவில் உள்ளது.

    சோழர்கள் காலத்தில் கட் டப்பட்ட கோவில்களின் நுழைவு வாயில் உயரமாக இருக்கும். ஆனால் இங்கு மட்டும் நுழைவு வாயில் குனிந்து செல்வது போல் கட்டப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும். இதனை சுற்றியுள்ள கிராமங்களின் வரலாற்று தொடர்பை திருவெள்ளறையில் உள்ள கம்ப வர்மனின் மார்மிடுகு பெருங்கிணறு கல்வெட்டு குறிப்பிடுகிறது.

    இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான புற்று வடிவில் அமைந்துள்ள வன்மீகநாதர் கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளை கடந்த பெருமை கொண்டதாகும். இங்குள்ள சித்தி விநாயகர், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமி, வன்மீக நாதர், கமலாம்பிகை, சண்டிகேஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு வருகிற (மார்ச்) 8-ந்தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    இதையொட்டி வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு காவேரி நதியில் இருந்து புனித நீர் ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது. தொடர்ந்து அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவசனம், பஞ் சகவ்ய பூஜை, தன பூஜை, வாஸ்து சாந்தி, மாலையில் விநாயகர் வழிபாடு, அங்கு ரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், யாகசலை பிரவேசம், முதல் கால யாக பூஜைகள் நடக்கிறது.

    7-ந்தேதி இரண்டாம் கால யாகபூஜை, 96 வகை திரவிய ஹோமம், பூர்ணாஹூதி, மூன்றாம் கால யாகபூஜை, சோமகும்ப பூஜை, மூலமந்திர பூஜை, வேதமந்திர காயத்ரி மந்திர மாலமந்தி, ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது.

    8-ந்தேதி காலை 6.30 மணிக்கு நான்காம் காலயாக பூஜை, 9.50 மணிக்கு கோவிலில் உள்ள அனைத்து விமான சம கால கும்பாபிஷேகமும், 10 மணிக்கு மூலவர் கும் பாபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனையும், பிரசாதம் வழங்குதலும் நடைபெறும்.

    மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 7 மணிக்கு ருத்ரதிரிசதை அம்பாளுக்கு லலிதாசரசர நாமமும், இரவு 9 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முத்துசாமி, அனிதா (கூடுதல் பொறுப்பு) மற்றும் கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×