search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சென்னிமலை முருகன் கோவிலில் இன்று தைப்பூச மகா தரிசன விழா
    X

    சென்னிமலை முருகன் கோவிலில் இன்று தைப்பூச மகா தரிசன விழா

    சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச மகா தரிசன விழா இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறுகிறது.
    சென்னிமலை முருகன் கோவிலில் கடந்த 10-ந் தேதி காலை தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். மறுநாள் 11-ந் தேதி மாலை 5.40 மணிக்கு தேர் நிலை சேர்க்கப்பட்டது.

    நேற்று முன்தினம் இரவு பரிவேட்டை, குதிரை வாகன காட்சியும் நடைபெற்றது. நேற்று இரவு தெப்போற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சென்னிமலை பார்க் ரோட்டில் உள்ள தெப்ப குளத்தில் தெப்ப தேரோட்டம் நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து பூத வாகன காட்சி, இசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான மகா தரிசன விழா இன்று (செவ்வாய்கிழமை) இரவு நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை 9 மணிக்கு மேல் சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு மேல் நடராஜ பெருமானும், சுப்பிரமணிய சாமியும் முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்கிறார்கள்.

    அதைத்தொடர்ந்து சாமி திருவீதி உலா நடைபெறுகிறது. அப்போது 4 ராஜ வீதிகளிலும் சாமிகள் வலம் வந்து அதிகாலையில் கைலாசநாதர் கோவிலுக்குள் அழைத்து செல்லப்படுகிறது.

    மகா தரிசன விழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவத்துடன் தேர் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது.
    Next Story
    ×