search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவில் தை பூஜை திருவிழா நாளை தொடங்குகிறது
    X

    செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவில் தை பூஜை திருவிழா நாளை தொடங்குகிறது

    உடன்குடி அருகே பிரசித்தபெற்ற செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவில் தை பூஜை திருவிழா நாளை (புதன் கிழமை) தொடங்குகிறது.
    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவிலும் ஒன்றாகும். கோவிலில் ஆண்டுதோறும் தை பூஜை திருவிழா 4 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டு தை பூஜை திருவிழா நாளை (புதன்கிழமை) மதியம் 1 மணிக்கு அன்னதானத்துடன் தொடங்குகிறது. இரவு 10 மணிக்கு மேக்கட்டி பூஜை நடக்கிறது.

    வரும் 19, 20 ஆகிய தேதிகளில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். இரவில் சமய சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.

    வரும் 21-ந்தேதி (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு கும்பாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறும். விழா நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ்களில் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து, தங்கியிருந்து சாமி தரிசனம் செய்வதற்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ராமசுப்பிரமணியன், செயல் அலுவலர் இசக்கியப்பன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×