search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீபுரம் தங்க கோவில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
    X

    ஸ்ரீபுரம் தங்க கோவில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

    ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடந்தது. யாக சாலை புனித நீரால் சீனிவாச பெருமாள், கோவில் கலசத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
    வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு நாள்தோறும் திரளான பக்தர்கள் தரிசிக்க வருகிறார்கள். தங்க கோவில் வளாகத்தில் ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது.

    மூலஸ்தானம், அர்த்த மண்டபம், கர்ப்பகிரகத்து மகா மண்டபம், ஆனந்த விமானம், சுந்தர விமானம் மற்றும் மகா துவாரத்துடன் மூலஸ்தானத்தில் பிரமாண்ட சுந்தர கவுந்தர்யத்துடன் 9 அடி உயரத்தில் கிருஷ்ண சிலா எனும் கறுப்புக்கல்லில் ஸ்ரீநிவாச பெருமாள் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் உற்சவர், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஸ்ரீபுரம் மகாலட்சுமி, ஜெய-விஜய கருடாழ்வார் போன்ற விக்ரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தான்ய வாசம், புஷ்ப வாசம், சஷிர வாசம் (பால்), தைலவாசம் (எண்ணை) போன்ற பூஜை முறை முடித்து, கரிக்கோல ஊர்வலத்துடன் ஸ்ரீநிவாச பெருமாள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.வேத முறைப்படி 8 கால சிறப்பு ஹோமம் செய்யப்பட்டது.

    யாகசாலையுடன் 9 ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டு, தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவில்களில் உள்ள வேத பண்டிதர்கள், ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு வேதத்தில் கூறப்பட்டுள்ள சிறப்பு மந்திரங்களால் ஹோம பூஜை செய்தனர்.

    இதைத் தொடர்ந்து, ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடந்தது. யாக சாலை புனித நீரால் சீனிவாச பெருமாள், கோவில் கலசத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது. சக்தி அம்மா தலைமை ஏற்று கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.

    விழாவில் கலவை சச்சிதானந்த சுவாமிகள், ஐகோர்ட்டு நீதிபதி மாலா, தி.மு.க. எம்.எல்.ஏக்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கலையரசு, ஸ்ரீபுரம் இயக்குநர் சுரேஷ், அறங்காவலர் சவுந்தி ரராஜன், மேலாளர் சம்பத், முன்னாள் கவுன்சிலர் ஏ.ஜி.பாண்டியன், சென்னை ஸ்ரீ சக்தி கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் மகேஷ் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×