search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    எருக்கஞ்சேரி ஸ்ரீகற்பக விநாயகர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
    X

    எருக்கஞ்சேரி ஸ்ரீகற்பக விநாயகர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

    எருக்கஞ்சேரி கிருஷ்ணமூர்த்தி சாலையில் உள்ள ஸ்ரீகற்பக விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நாளை (4.12.16) நடைபெற உள்ளது.
    எருக்கஞ்சேரியில் கிருஷ்ணமூர்த்தி சாலையில் ஸ்ரீகற்பக விநாயகர் கோவில் உள்ளது. இந்த கற்பக விநாயகருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் நிகழும் மங்களகரமான துர்முகி வருடம் கார்த்திகை மாதம் 19-ம் நாள் (4.12.16) ஞாயிற்றுக்கிழமை திருவோணம் நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 7 மணிமுதல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு காஞ்சி பெரியவாள் அவர்களின் நல்ஆசிர்வாதத்துடன் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இந்த கும்பாபிஷேகத்திற்கான பந்தக்கால் 24.11.16 அன்று நடப்பட்டு பூஜைகளும், அன்னதானமும் நடைபெற்று வருகிறது.

    நேற்று (2.12.16 அன்று ) முதல் யாக பூஜை காலையில் கணபதி பிரார்த்தனை, கணபதி ஹோமம், கோ பூஜை, தன பூஜையுடன் தொடங்கியது.

    இன்று காலை (3.12.16) இரண்டாம் கால யாக பூஜை காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த பூஜையில் கிராம சாந்தி, யாக சாலை பிரவேசம், கும்ப அர்ச்சனை, பரிவார கலச பூஜை, த்ரவிய ஆஹுதி, மகா பூர்ணாஹுதியும், 10 மணிக்கு தூப தீப நிவேத ஆராதனை, மந்திர புஷ்ப பூஜையும் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து இன்று மாலை 5 மணி அளவில் மூன்றாம் கால யாக நடைபெற உள்ளது. அதில் கும்ப அர்ச்சனை, பரிவார கலச அர்ச்சனை, மகா கணபதி மூல மந்திர ஜபஹோமம், திரவிய ஆஹுதி, மஹா பூர்ணாஹுதி மந்திர புஷ்பம், தூப தீப நிவேத ஆராதனை பூஜைகளும் நடைபெற உள்ளது.

    நாளை ஞாயிற்றுக்கிழமை (4.12.16) காலை 6 மணிக்கு நான்காம் கால யாக பூஜை நடைபெற உள்ளது. இதில் மங்கள இசை, யாக சாலை பிரவேசம், பிரதான கலசம் மற்றும் பரிவார கலச பூஜையும் நடைபெற உள்ளது.

    அதனை தொடர்ந்து காலை 8.30 மணி அளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.  அன்றைய தினம் மாலை 4 மணி அளவில் ஸ்ரீ கற்பக விநாயகருக்கு சகஸ்ரநாமம் அர்ச்சனை நடைபெறுகிறது.

    மாலை 6 மணி அளவில் ஸ்ரீ கற்பக விநாயகருக்கு திருவீதி உலா நடைபெறுகிறது.

    கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக குழுவினர்கள், ஆலய விழா குழுவினர்கள் மற்றும் பொதுமக்களும் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×