search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நெல்லையப்பர் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு
    X

    நெல்லையப்பர் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு

    நெல்லையப்பர் கோவிலில் தங்கத்தேர் தொடங்கி 7 ஆண்டுகள் முடிவடைந்து 8-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி நேற்று தங்கத்தேர் இழுக்கப்பட்டது.
    நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலுக்கு கடந்த 2009-ம் ஆண்டு தங்கத்தேர் செய்யப்பட்டது. சங்கரானந்த சுவாமி தலைமையில் பக்தர்களிடம் காணிக்கையாக 10½ கிலோ தங்கம் பெறப்பட்டு தேர் செய்யப்பட்டது.

    இந்த தங்கத்தேர் பக்தர்களால் நேர்த்திக்கடனாக அவ்வப்போது இழுக்கப்படுகிறது. தங்கத்தேர் தொடங்கி 7 ஆண்டுகள் முடிவடைந்து 8-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி நேற்று தங்கத்தேர் இழுக்கப்பட்டது.

    இதையொட்டி சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. நேற்று இரவு 7 மணிக்கு காந்திமதி அம்பாள் தங்கத்தேரில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து மேள வாத்தியங்கள் முழங்க தேர் இழுக்கப்பட்டது.

    தங்கத்தேர் சுவாமி சன்னதியை வலம் வந்து நிறைவடைந்தது. தேரோட்டத்தில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் திருஞானம், காந்திமதி-நெல்லையப்பர் உபய திருப்பணி மன்றம் மற்றும் தங்கத்தேர் திருப்பணிக்குழு செயலாளர் சோனா.வெங்கடாசலம், பொருளாளர் செல்லையா, நிர்வாகி காசிவிசுவநாதன், வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலைய மேலாளர் செல்லத்துரை மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×