search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பாரதமாதா கோவிலில் நிறுவப்படும் பள்ளிகொண்ட பெருமாள் சிலை வடிவமைக்கப்பட்ட போது எடுத்த படம்.
    X
    பாரதமாதா கோவிலில் நிறுவப்படும் பள்ளிகொண்ட பெருமாள் சிலை வடிவமைக்கப்பட்ட போது எடுத்த படம்.

    கன்னியாகுமரி பாரத மாதா கோவிலில் நிறுவ பெருமாள், நடராஜர் சிலைகள் வடிவமைப்பு

    கன்னியாகுமரி பாரதமாதா கோவிலில் நிறுவ பெருமாள், நடராஜர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் ரூ.25 கோடி செலவில் ராமாயண தரிசனம் மற்றும் பாரத மாதா கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் 14 ஆயிரம் சதுர அடியில் கட்டப்படுகிறது. இந்த கோவிலின் நுழைவு வாசலில் 27 நட்சத்திரத்தை குறிக்கும் வகையில் 27 அடி உயர ஒரே கல்லால் செதுக்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டு உள்ளது.

    மேலும், இந்த கோவிலில் பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட 12½ அடி உயரமுள்ள பாரதமாதா சிலை நிறுவப்பட்டு உள்ளது.

    இந்த பாரதமாதா சிலை அமைந்துள்ள பகுதியில் சாமிசிலைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலைகளை சென்னையை சேர்ந்த ஓவியர் பாஸ்கரதாஸ், சிற்பி சுரேஷ் ஆகியோர் வடிவமைத்து உள்ளனர். இங்கு நடராஜர் தாண்டவம் ஆடும் கோலத்திலும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சிவபெருமானை வேண்டி ஒன்றைக்காலில் தவம் இருப்பது போன்ற காட்சியும், பெருமாள் திருப்பாற் கடலில் பள்ளி கொண்ட கோலத்திலும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த கோவில் குளச்சலை சேர்ந்த எஸ்.சி. கன்ஸ்ட்ரக்‌ஷன் நிர்வாக இயக்குனர் சி. முருகேசன் மேற்பார்வையில் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளை விவேகானந்த கேந்திர துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் விவேகானந்த கேந்திர செயலாளர் மற்றும் பொருளாளர் அனுமந்தராவ், ஊழியர் கிருஷ்ணமூர்த்தி, தலைமை அலுவலக செயலாளர் ரகுநாதன்நாயர், இணை செயலாளர் பிரவீன் தபோல்கர், கேந்திர நிர்வாக அதிகாரி அனந்த ஸ்ரீ பத்மநாபன், மேலாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.
    Next Story
    ×