search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையை பார்க்க சொல்வது ஏன்?
    X

    காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையை பார்க்க சொல்வது ஏன்?

    காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கைகளைப் பார்க்க வேண்டும் என்பதற்கான காரணங்களை கீழே பார்க்கலாம்.
    நம் உறுப்புகளில் ஒன்றான கைகள் நாம் அன்றாட பணிகளைச் செய்வதற்கு மிகவும் பயன்படுகிறது. கைகளின் உதவி இல்லாமல் நாம் எந்தவொரு செயலையும் செய்ய முடியாது. செயல்களுக்குரிய புலன்களில் கைகளுக்கென்று தனி இடம் உண்டு.

    இறையுருவத்தை வணங்க, புஷ்பத்தை அள்ளிச் சமர்ப்பணம் செய்ய கைகள் தான் உதவிகிறது.

    நாம் உள்ளங்கைகளைப் பார்க்கும் பொழுது இறைவனின் உருவங்கள், அபயவரத முத்திரைகளைத் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி தருவதாக தோன்றும். இதனால் இறைவனின் உருவத்தின் பெருமைகளை கைகள் வெளிப்படுத்துகின்றன. எனவே கைகள் கடவுளுக்குச் சமமானது என வேதங்கள் சொல்கின்றது.

    ஹஸ்தரேகா சாஸ்திரம் கையை வைத்து உருவானது. இந்த சாஸ்திரத்தில் கையின் நுனியில் அலைமகளும், நடுவில் கலைமகளும் அடிப்பக்கத்தில் கோவிந்தனும் இருப்பதாக கூறப்படுகிறது.

    அறிவு, செல்வம், ஆன்மிகம் ஆகிய மூன்றையும் பெறுவதற்கு தான் நாம் காலையில் எழுந்ததும் கைகளைப் பார்க்க வேண்டும் என்று புராணங்களில் கூறப்பட்டதை நாம் பழக்கவழக்கமாக கொள்கிறோம்.

    மேலும் நாம் காலையில் எழுந்து நம் உள்ளங்கைகளை பார்க்கும் போது,

     ”கராக்ரே வஸதெ லஷ்மீ கரமத்யே ஸரஸ்வதி
     கரமூலேது கோவிந்த: ப்ரபாதெ கரதர்சனம்”

    என்ற ஸ்லோகத்தை கூற வேண்டும்.

    இவ்வாறு செய்தால் நம்முடைய நடைமுறையில் நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்றி பல நன்மைகள் நம்மை கூடி வரும் என்பது ஒரு கடவுள் ஐதீகமாக உள்ளது.
    Next Story
    ×