search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகப்பெருமானின் 7-வது படை வீடு
    X

    முருகப்பெருமானின் 7-வது படை வீடு

    மருதமலை கோவில்மு ருகப்பெருமானின் 7-ம் படை வீடாக கருதப்படுகிறது.
    கோவை மாவட்டத்தில் மருதமலை பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சோமையம் பாளையம் ஊராட்சியில் உள்ள ஒரு மலை ஆகும். இது கோவையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகன் கோவில் முருகப்பெருமானின் 7-ம் படை வீடாக கருதப்படுகிறது.

    இக்கோவில் மிகவும் பழமையானது ஆகும். திருமுருகன்பூண்டி கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் இக்கோவிலை பற்றிய குறிப்புகள் உள்ளன. அது ஏறக்குறைய 1200 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலுக்கு அருகிலேயே பாம்பாட்டி சித்தர் குகைக்கோவில் ஒன்றும் உள்ளது. 

    இக்கோவில் முற்காலத்தில் கொங்கு வேட்டுவ கவுண்டர் மன்னர்களின் சொத்தாக விளங்கியது. முருக கடவுளின் பிற கோவில்களை போலவே மருதமலை செல்லும் கோவிலும் மேற்கு தொடர்ச்சியின் விரிவான இந்த மலை உச்சியில் அமைந்துள்ளது.
    Next Story
    ×