search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோட்டை மாரியம்மன் கோவில் ஆடிப்பெருந்திருவிழா
    X

    கோட்டை மாரியம்மன் கோவில் ஆடிப்பெருந்திருவிழா

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் இந்த ஆண்டுக்கான ஆடி திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் இந்த ஆண்டுக்கான ஆடி திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைப்பு-உருளுதண்டம் போட்டு நேர்ச்சை செலுத்தும் நிகழ்வு கடந்த 9-ந் தேதி தொடங்கியது. பொங்கல் வைத்தும், உருளுதண்டம் போட்டும் 3-வது நாளாக இன்றும் விடிய விடிய ஏராளமான பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். நீண்ட வரிசையில் நின்றும் அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    இதேபோல சேலம் அம்மாபேட்டை பலபட்டரை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பண்டிகையொட்டி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் எதிரே உள்ள மைதானத்தில் திரளான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மா பேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கினர்.

    சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நேற்று பொங்கல் வைத்து வழிபட்டனர். சேலம் அன்னதானப் பட்டி மாரியம்மன் கோவில், கடை வீதி சின்னமாரியம்மன் கோவில், பொன்னம்மா பேட்டை மாரியம்மன் கோவில், சஞ்சீவராயன் பேட்டை மாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில், ஓம்சக்தி மாரியம்மன் கோவில் உள்பட பல கோவில்களிலும் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

    இதையொட்டி மாநகர போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய்குமார் உத்தரவின் பேரில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்றும் ஏராளமான பக்தர்கள் குவிந்து பொங்கல் வைத்தும், உருளுதண்டம் நேர்த்திக்கடன் செலுத்தியும் அம்மனை தரிசனம் செய்தனர். இரவு 10 மணி வரை இந்த நிகழ்வு நடக்கிறது.

    அப்போது பக்தர்களுக்கு கூழ், சர்க்கரை பொங்கல் உள்பட பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
    Next Story
    ×