search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பசுபதீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா 12-ந் தேதி தொடங்குகிறது
    X

    பசுபதீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா 12-ந் தேதி தொடங்குகிறது

    நாகர்கோவில் இருளப்பபுரம் பசுபதீஸ்வரர்- பிரசன்னபார்வதி கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 12-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை நடக்கிறது.
    நாகர்கோவில் இருளப்பபுரம் பசுபதீஸ்வரர்- பிரசன்னபார்வதி கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 12-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை நடக்கிறது. திருவிழாவில் முதல் நாளான 12-ந் தேதி காலை 6 மணிக்கு தேவார பஜனை, 7.30 மணிக்கு கொடியேற்றம், 8 மணிக்கு தீபாராதனை, 9 மணிக்கு முருக பெருமானுக்கு சஷ்டி அபிஷேகம், மாலை 3 மணிக்கு துர்கா பூஜை, மாலை 6.30 மணிக்கு 1,008 திருவிளக்கு பூஜை வழிபாடு ஆகியன நடக்கிறது. 13-ந் தேதி திருவாதிரை விழாவும், இளைஞர் நற்பணி மன்ற ஆண்டு விழாவும் நடக்கிறது.

    வருகிற 14-ந் தேதி (சித்திரை 1-ந்தேதி) காலை 7 மணிக்கு கணிகாணல் நிகழ்ச்சியும், கைநீட்டம் வழங்குதலும், காலை 10 மணிக்கு பாலாபிஷேகமும் நடக்கிறது. 15-ந் தேதி இரவு சாந்தி விநாயகர் அபிஷேகமும், 16-ந் தேதி திருவெம்பாவை அபிஷேகம், மகளிர் மன்ற மாநாடு நடக்கிறது. 17-ந் தேதி இரவு 61-வது இந்து சமய மாநாடு நடக்கிறது.

    18-ந் தேதி இரவு 7 மணிக்கு பிரசன்ன பார்வதி உடனுறை பசுபதீஸ்வரர் திருக்கல்யாணம், இரவு 9 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 19-ந் தேதி மாலை 6.30 மணிக்கு சுவாமி பரிவேட்டை போன்றவை நடக்கிறது. திருவிழா இறுதி நாளான 21-ந் தேதி காலை 9 மணிக்கு பாலாபிஷேகம், மதியம் 12 மணிக்கு காவடி ஆட்டம், 1 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு சித்திரை திருவிழா சிறப்பு மாநாடு போன்றவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருவிழா குழுவினர் செய்துள்ளனர்.
    Next Story
    ×