search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மருதமலை முருகன் திருப்புகழ்
    X

    மருதமலை முருகன் திருப்புகழ்

    மருதமலைக்குரிய ஒரு திருப்புகழ் பாடலை கீழே காணலாம்.
    தமிழ்நாட்டில் முருகப் பெருமான் கோவில் கொண்ட தலங்களையெல்லாம் நம் திருப்புகழ் கவிமணிகளால் இழைத்து அலங்கரித்தவர் அருணகிரிநாதர். சந்தன கவியின் ஊற்றாக திகழ்ந்தவர்.

    அருணகிரிநாதரை துதி செய்து அருள் பெற்றோர் பலர். ஒரு ஆனி மாதம் பவுர்ணமி கூடிய மூல நாளில் கந்தவேலின் வழியில் கலந்து பேரின்ப பெருவாழ்வில் அமர்ந்தருளினார் அருணகிரிநாதர். 

    அருணகிரிப் பெருமான் கொங்கு நாட்டுக்கு மூன்று முறை தல யாத்திரை மேற்கொண்டு ஏறக்குறைய 35 தலங்களுக்கு சென்று 160 திருப்புகழ் பாடல்களை பாடியுள்ளார். மருதமலைக்குரிய ஒரு திருப்புகழ் பாடலை கீழே காணலாம்.

    திரிபுரம் அதனை ஒரு நொடியதனில்
    எரிசெய் தருளிய சிவன் வாழ்வே!
    சினம் உடைஅரசுர் மனமது வெருவ
    மயிலது முடுகி விடுவோனே!
    அருவரை யாதனை உருவிட எரியும்
    அறுமுகம் உடைய வடிவேலா!
    பசலைய டணையும் இளமுலை மகளை
    மதன்விடு பகழி தொடலாமோ!
    கரிதிரு முகமும் இடைஉடை வயிறும்
    உடையவர் பிறகு வருவோனே!
    கனதனம் உடைய குறவர் தம்மகளை
    கருணைய டணையும் மணிமார்பா!
    அவரணை துயிலும் அரிதிரு மருகா
    அணிசெயுமருத மலையோனே!
    அடியவர்வினையும் அமரர்கள் துயரும்
    அற அருள்உதவ பெருமாளே!

    (திருப்புகழ் - அருணகிரிநாதர்)
    Next Story
    ×