search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முன்னோர்களின் அருள் கிடைக்கும் மகாளய அமாவாசை விரதம்
    X

    முன்னோர்களின் அருள் கிடைக்கும் மகாளய அமாவாசை விரதம்

    மகாளய அமாவாசை அன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் நம் முன்னோர்கள் நம்மை வாழ்த்துவார்கள். நம் முன்ஜொன்ம பாவங்களும் நீங்கும்.
    மகாளய அமாவாசை (புரட்டாசி) இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். புரட்டாசி மாதத்தில் வருகின்ற அமாவாசை மகாளய அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது.

    இந்துக்கள் ஒரு வருடத்தை இரண்டு காலமாக பிரித்துள்ளனர். அதில் தை முதல் ஆனி மாதம் வரை பகல் காலம். இதை “உத்தராயண காலம்” என்றும், ஆடி முதல் மார்கழி வரை இரவு காலம். இதை “தட்சணாயன காலம்” என்றும் அழைக்கப்படுகிறது.

    புராணப்படி உத்தராயண காலம் என்பது தேவர்களின் பகல் நேரம். தட்சணாயன காலம் எனப்படும், அதாவது இரவு காலத்தில் தேவர்கள் உறங்குவதாகவும், இதனால்தான் நரகாசுரன், மஹிஷாசுரன் போன்ற அசுரர்களின் அட்டகாசம் அதிகமானதாகவும் அவர்களை தேவர்களால் எதுவும் செய்ய முடியாமல் அவதிப்பட்டார்கள் எனவும், இதனால்தான் இந்த மாதங்களில் அம்மனும், கிருஷ்ணரும் தேவர்களை காப்பாற்ற அவதாரம் எடுத்து வந்ததாக புராணம் சொல்கிறது. 

    துஷ்டசக்திகளின் அட்டகாசத்தால் பூலோகவாசிகளுக்கு பிரச்னை உருவாகும் என்பதால்தான் ஆடி மாதம் பித்ருக்கள் மற்றும் முன்னோர்களுக்கு உகந்த மாதமாக அமைத்து அவர்களின் குடும்பத்தை துஷ்டசக்திகளிடம் இருந்து காக்க அவர்களை பூலோகத்திற்கு அனுப்பி வைப்பதாக கருட புராணம் சொல்கிறது.

    மகாளய (புரட்டாசி) அமாவாசையில் பித்ருக்களை நினைக்க வேண்டும்

    சூரியனை பிதுர்காரகன் அதாவது தந்தையின் நிலை, தந்தை வழி முன்னோர்களை அறிவது, என்றும் சந்திரனை மாதுர்காரகன் அதாவது தாயின் நிலை, மற்றும் தாய் வழி முன்னோர்களை அறிவது என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சூரியனும் சந்திரனும் ஒரே பாதையில் பூமிக்கு நேராக வரும் போது அமாவாசை உருவாகிறது. அமாவாசையில் முன்னோர்களை வணங்கினால் நன்மை ஏற்படும். அதிலும் புரட்டாசி அமாவாசைக்கு தனி சிறப்பு உண்டு. ஒரு குடும்பத்தை சார்ந்த இறந்து போன முன்னோர்கள், தம் குடும்பத்தினரின் வம்சம் செழிக்க அருள் தரட்டும் என்ற எண்ணத்தில் இறைவன், புரட்டசி மாதத்தில் முன்னோர்களின் ஆத்மாக்களை பூமிக்கு அனுப்பி வைக்கிறார் என்கிறது புராணம்.

    Next Story
    ×